தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிவு.. 15 பேர் பணி நீக்கம்
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. அண்மை காலத்தில் ஆந்திராவிற்கு முதலீடுகள் மாறி சென்ற விவகாரத்தை அடுதது, அதில் ஹைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பணியாற்றிய 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே Guidance Tamil Nadu நிறுவனத்தில் பணியாற்றிய, ப்ரீஜா பிரசாத், கிறிஸ்டோ லாரல் எல் மற்றும் பிரபாகரன் ஆண்டிஆகியோர் ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் உடனடியாக பணியில் சேர்ந்துள்ளனர்.
ஹைடன்ஸ் தமிழ்நாடு என்பது ஒரு சராசரியான அரசு துறை நிறுவனம் கிடையாது. இது மாநிலத்தின் முதலீட்டு கட்டமைப்பின் முதுகெலும்பாக இருக்கிறது. முக்கியமான தொழில்துறை முதலீட்டு முன்மொழிவுகள், முதலீட்டாளர்களின் ரகசியத் தகவல்கள் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார எதிர்காலம் ஆகியவற்றை கவனிக்கும் பொறுப்பை இந்த அமைப்பு தான் மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்பு பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர். அதாவது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் வந்தவர்கள் அல்ல. அதேநேரம் அரசே இவர்களின் தனித் திறமையை அடிப்படையாக வைத்தே வேலைக்கு எடுத்துள்ளது.

ஆனால் அமைக்காலத்தில் ஹைடன்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு பிரிவினர் தவெக அரசுக்கு எதிராக திரும்பி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. பொதுவாக தொழில் வல்லுநர்கள் தங்களது தொழில் வாய்ப்புகளைத் தேடிச் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், முக்கியமான தொழில்துறை முதலீட்டு தகவல்களை திரட்டும் பணியாற்றும் ஊழியர்கள், போட்டி மாநிலத்திற்கு நேரடியாக வேலைக்கு சென்றது பெரும் சர்ச்சையானது. ஏனெனில் தமிழ்நாடு அரசு இவ்வளவு நாளாக கொண்டு வந்த முதலீடுகள் மற்றும் ரகசியத்தன்மை, முரண்பாடு மற்றும் நிறுவனத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை பெரும் கேள்விகளை உருவாக்கி உள்ளது.
தென் கொரிய வாகனத் தொழில்துறை முதலீடு ஆந்திரா பக்கம் போனது தான் பெரிய சர்ச்சையாக மாறியது. நில ஒதுக்கீடு, அனுமதிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உதவுதல் ஆகியவற்றில் தாமதங்கள் ஏற்பட்டதாகவும் இதற்கு பணியாற்றும் ஊழியர்களும் காரணம் என்று தவெக ஆதரவாளர்களே பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரத்தில் Guidance Tamil Nadu நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த சூழலில் ஹைடன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய, ப்ரீஜா பிரசாத், கிறிஸ்டோ லாரல் எல் மற்றும் பிரபாகரன் ஆண்டி ஆகியோர் அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் பணியில் சேர்ந்துள்ளனர்.
எனவே இந்த விவகாரத்தில் அலட்சியம் நடந்தது உறுதியானால், கசிவுகள் நடந்தது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. அரசு இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக செய்தி வெளியிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications
