மோடி ஜெயில் செல்வதை காங்கிரஸ்கார்களே தடுத்ததால் இப்போது அனுபவிக்கிறோம் – புலம்பிய வீரப்பமொய்லி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ''மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தபோது அமித்ஷாவை போல்கு நரேந்திர மோடியை சிறைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் நரேந்திர மோடிக்கு எதிரான விசாரணையை காங்கிரஸ் கட்சியினரே தாமதப்படுத்தினர். இதனால் தான் இன்று அனுபவிக்கிறோம்'' என்று முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், கர்நாடகா மாஜி முதல்வருமான வீரப்பமொய்லி மேடையில் புலம்பி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் சோனியா காந்தி தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசிய சம்பவங்களை தொகுத்துக்கு தனி புத்தகமாக வெளியிட்டார். Belonging: A Journey of Love என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

Modi

இந்நிலையில் தான் கர்நாடகாவில் சோனியா காந்தியின் புத்தகம் அறிமுகம் செய்யும் விழா காங்கிரஸ் சார்பில் பெங்களூரில் நடந்தது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடகா மாஜி முதல்வருமான வீரப்பமொய்லி பங்கேற்று கூறிய கருத்து பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த விழாவில் வீரப்பமொய்லி பேசியதாவது:

''மத்தியில் காங்கிரஸ் கட்சியின் யுபிஏ அரசு ஆட்சியில் இருந்தது. நான் மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தேன். அமித்ஷா அப்போது குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தார். இப்போது அவர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். ஆனால் அமித்ஷாவை குஜராத்தில் இருந்து நீதிமன்றம் வெளியேற்றியது. அவர் தொடர்பான வழக்கு கூட வெளிமாநிலத்தில் நடந்தது. அமித்ஷா முதல் நபராக ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அடுத்து நரேந்திர மோடி (அப்போது குஜராத்தில் முதல்வராக இருந்தார்) தான் சிறைக்கு சென்று இருக்க வேண்டும். குஜராத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு கடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. இதுபற்றிய விவரத்தை நான் இப்போது சொல்லப்போவது இல்லை. ஏனென்றால் இது எல்லாம் நம் கட்சிக்கான துயரங்கள். நம் சொந்த க்டசியின் தலைவர்களை நரேந்திர மோடிக்கு எதிரான விசாரணையை நிறுத்தி வைத்தனர்.

மத்தியில் அப்போது நம்முடைய அரசு தான் இருந்தது. இந்த விசாரணையை பிரதமர் மன்மோகன்சிங் நிறுத்தவில்லை. பிற சில தலைவர்கள் நிறுத்தினர். இபு்போது அதனை நாம் அனுபவித்து வருகிறோம்'' என்று கூறினார். இதன்மூலம் நரேந்திர மோடியை அன்றைக்கே சிறையில் அடைத்து இருந்தால் இன்று பாஜகவை எதிர்த்து இவ்வளவு தூரம் போராட வேண்டிய நிலை வந்து இருக்காது என்பதை மறைமுகமாக வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி எந்த வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிரான விசாரணை நிறுத்தப்பட்டது என்பதை வீரப்பமொய்லி கூறாவிட்டாலும் கூட எளிதாக கணிக்க முடியும். அதாவது நரேந்திர மோடி கடந்த 2002ம் ஆண்டு முதல் 2014 வரை குஜராத்தில் முதல்வராக இருந்தார். அப்போது 2002 முதல் 2010ம் ஆண்டு வரை குஜராத்தில் உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தார்.

இந்த சமயத்தில் குஜராத்தில் சொராபுத்தீன் என்பவர் மிகவும் பிரபலமாக இருந்தவர். இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. மார்பிள் நிறுவனம்மற்றும் கட்டுமான நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தல், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது.

மத்திய பிரதேசத்தின் ஜார்னியா கிராமத்தில் பிறந்த சொராபுத்தீன் ராஜஸ்தான் மாநிலத்தின் உதயப்பூர், குஜராத்தின் அகமதாபாத் மற்றும் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் உள்ளிட்ட இட்களில் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தனது மனைவி கவ்சார் பீ என்பவருடன் ஹைதரபாத்தில் இருந்து பஸ்சில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலிக்கு சென்றார்.

அப்போது குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினர் அவரை கைது செய்தனர். முதல்வராக இருக்கும் நரேந்திர மோடியை தாக்க திட்டமிட்டதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு இருவரும் போலீஸ் பிடியில் தப்பியதாக கூறப்பட்டது. சொராபுத்தீன் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். பிறகு அவரது மனைவி கவ்சார் பீயும் இறந்தார். அவரை மர்மநபர்கள் கொன்று உடல் எரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு சொபுத்தீன் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

இதில் சொராபுத்தீன் என்கவுண்ட்டர் போலி என்கவுன்ட்டர் என்று கூறப்பட்டது. உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா மீது குற்றம்சாட்டு முன்வைககப்பட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிஐடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் 2010ல் சிபிஐக்கு ஒப்படைத்தது. சிபிஐ அதிரடியாக கைது நடவடிக்கையை எடுத்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அமித்ஷாவை கைது செய்தது. சுமார் 3 மாதம் சிறையில் இருந்தார். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இருப்பினும் குஜராத்துக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 2 ஆண்டு வரை அவர் குஜராத்துக்குள் செல்ல முடியவில்லை.

வீரப்பமொய்லி சொல்வதை பார்த்தால் இந்த வழக்கில் தான் நரேந்திர மோடிக்கு எதிரான விசாரணையை காங்கிரஸ் தலைவர்களை தாமதப்படுத்தியது உறுதியாகிறது. ஏனென்றால் வீரப்பமொய்லி 1992 முதல் 1994 வரை கர்நாடகா முதல்வராக இருந்தார். அதன்பிறகு மன்மோகன் சிங்கின் 2வது முறையாக பிரதமராக இருந்தபோது வீரப்பமொய்லி பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக செயல்பட்டார். 2009 முதல் 2011 வரை சட்டத்துறை அமைச்சராக இருந்தார். இதனால் வீரப்பமொய்லி சொல்வது சொராப்புத்தீன் என்கவுண்ட்டர் வழக்கை தான் கூறியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+