மற்றவர்கள் தவெகவை நம்பாத காலத்திலும்.. விஜய்யை நம்பி வந்தவர்! விஎஸ் பாபு பற்றி ஆதவ் அர்ஜுனா உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 75 வயதான கொளத்தூர் எம்எல்ஏவாக இருந்த விஎஸ் பாபு இன்று பிற்பகல் காலமானார். விஎஸ் பாபு எப்போதும் முதல்வரின் நம்பிக்கையை பெற்ற ஒருவராகவே இருந்தார் என குறிப்பிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போதும் நம்பி வந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவான விஎஸ் பாபு இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் சிறிய உடல்நிலை பாதிப்பு, சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார் என்றே சொல்லப்பட்டது. இருப்பினும், சில நாட்கள் வாரங்கள் ஆனது. பிறகு மாதங்கள் ஆனது.

Aadhav Arjuna Pays Tribute to VS Babu

விஎஸ் பாபு

இடையே இடையே மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வந்தாலும் அனைத்திலும் ஒரே விஷயம் தான் இருக்கும். உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை அளித்து வருகிறோம் என்பது மட்டுமே இருக்கும். இந்த சூழலில் இன்றைய தினம் அவரது உடல்நிலை மோசமாகி, அவர் காலமானார். இதனால் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்தார். அதை தொடர்ந்து சற்று நேரத்தில் விஎஸ் பாபு மரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. செப். 9ம தேதி நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட விஎஸ் பாபு, இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

இந்த அறிவிப்பு வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தவெகவின் கடினமான காலகட்டத்தில் எங்களுடன் உடன் நின்றவர் விஎஸ் பாபு. முதல்வரின் நம்பிக்கை பெற்ற ஒருவராகவே விஎஸ் பாபு இருந்தார். வடசென்னையின் முகமாக இருந்தவர்; கஷ்ட காலங்களிலும் சிரித்த முகத்தோடு இருப்பார்.

தவெகவில் குடும்பத்தோடு இணைந்த அவர், முதல் சந்திப்பிலேயே வடசென்னை மக்களின் கஷ்டம் குறித்தே முதல்வரிடம் எடுத்துரைத்தார். வடசென்னை மக்களுடன் மக்களாகவே எளிமையாக இருந்தார். வடசென்னை மொழியை பேசும் அவர், தைரியமும் பாசமும் நிறைந்த ஒருவர்.

மாற்றம்

என்னை அவர் தனது குடும்பத்தின் ஒரு பகுதியாகவே மகனாகவே பார்த்தார். சென்னையில் புதிய கட்சி ஜெயிக்க முடியுமா என்று பலரும் சொன்ன போது, நிச்சயம் முடியும் என நம்பிக்கை கொடுத்தவர். சென்னையில் குறிப்பாக வடசென்னையில் கடந்த 50 ஆண்டுகளாக எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. அதை தவெகவால் தான் கொடுக்க முடியும் என நம்பியவர்.

விஜய் பிரச்சாரம்

வடசென்னை மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அதனால் தான் பெரம்பூரில் தனது பிரச்சாரத்தை முடித்தவுடன் கொளத்தூரில் பிரச்சாரத்திற்கு சென்றார். விஎஸ் பாபு கேட்டு கொண்டதாலேயே விஜய் முதலில் கொளத்தூரில் பிரச்சாரம் செய்தார்.

கட்சிக்கும் சரி, தொகுதி மக்களுக்கும் சரி எப்போதும் நல்ல செய்ய நினைத்தவர். அவரது இழப்பு என்பது அவரது குடும்பத்திற்கும், கட்சிக்கும் மட்டுமானது இல்லை.. ஒட்டுமொத்த சென்னை, குறிப்பாக வடசென்னைக்கும் முக்கிய இழப்பாகும். அவரது வழியில் கொளத்தூர் மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+