தமிழ் பாடலுக்கு முதல் கிராமி நாமினேஷன்.. ‘வருவாயி’ பாடல் செய்த சாதனை! உலக மேடையில் பாரதியார் கவிதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் பாடல்கள் என்றாலே உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நம்ம ஊரில் உருவாகும் இசை பாடல்கள், சினிமா என அனைத்தும் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் ரசிக்கப்படுகிறது. ஆனால் சர்வதேச அளவில் மிகப்பெரிய இசை விருதாக பார்க்கப்படும் கிராம விருது மேடையில் ஒரு தமிழ் பாடல் நாமினேஷன் பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்த பெருமையை இப்போது வருவாயி என்ற பாடல் பெற்றிருக்கிறது.

தமிழ் பாடலுக்கு விருது

2027 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 69 வது கிராமிய விருதுகளில் சிறந்த உலக இசை நிகழ்ச்சி பிரிவில் இந்த பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமி விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் என்ற வரலாற்றையும் உருவாக்கி இருக்கிறது. இந்த பாடலைப் பொறுத்தவரை ஏதோ புதிதாக எழுதப்பட்ட பாடல் கிடையாது. நம்முடைய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கவிதையை அடிப்படையாகக் கொண்டு நவீன இசை வடிவத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Varuvaayi

பாரதியார் எழுதிய கிருஷ்ண பக்தி பாடலின் கருத்துக்களை இன்றைய இசை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் மாற்றி உருவாக்கி இருக்கிறார்கள். கிருஷ்ணனை அழைக்கும் பக்தி உணர்வோடு எழுதப்பட்ட இந்த கவிதை மனிதனுடைய சிந்தனையில் இறைவன் வந்து தீமைகளை அழிக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டு இருக்கிறது. 100 வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பாரதியாரின் படைப்பு இப்போது நவீன இசை கருவிகள், கர்நாடக இசை நுணுக்கங்கள், வேறுபட்ட இசை அமைப்பு என புதிய வடிவத்தில் உலக இசை மேடை கவனத்தை பெற்றிருக்கிறது.

வருவாயி பாடலுக்கு தேவன் ஏகாம்பரம் இசை அமைத்து பாடி இருக்கிறார். சூசா என்று அழைக்கப்படும் சுபிஷா ரங்கராஜன் குரலும் இதில் இணைந்திருக்கிறது. கர்நாடக இசையின் அடிப்படையோடு ராக் ஜாஸ் போன்ற நவீன இசை அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த பாடல் வழக்கமான சினிமா பாடல் பாணியில் இல்லாமல் தனித்துவமான இசை அனுபவத்தை கொடுக்கிறது. அடிப்படையிலான இசை அமைப்பும், பாரம்பரிய இசையும், நவீன ஒலியையும் இணைக்கும் முயற்சியும் இந்த பாடலில் முக்கிய அம்சமாக இருக்கிறது.

யார் இந்த தேவன் ஏகாம்பரம்

இந்த கிராமிய நாமினேஷன் அறிவிப்பு வெளியானதும் தேவன் ஏகாம்பரம் பெயர் பலருக்கும் புதிதாக இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமா பாடல்களை தொடர்ந்து கேட்டு வருபவர்களுக்கு இவருடைய குரல் பல பாடல்களில் கேட்டிருக்கும். அமெரிக்காவில் வளர்ந்த தேவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே இசை மீது இருந்த ஆர்வத்தால் இந்தியாவுக்கு வந்து, இசை வாய்ப்பை தேடி இருக்கிறார்.

1999 ஆம் ஆண்டு ஏஆர் ரகுமான் இசையில் வெளியான காதலர் தினம் படத்தில் 'ஓ மரியா' பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழ் மட்டும் இன்றி தென்னிந்தியா மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் பாடியிருக்கிறார். குஷி, மின்னலே உள்ளிட்ட படங்களில் இவர் பாடியிருக்கிறார். பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

தனித்துவமான குரல்

அதுபோல இந்த பாடலின் குரல் கொடுத்திருக்கும் சுஷா என்கிற சுபிஷா ரங்கராஜன் இசையில் தனித்துவமான பயணத்தை கொண்டவர். ஆரம்பத்தில் கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற இவர் பின்னர் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஜாஸ் இசையையும் படித்திருக்கிறார். 2027 கிராமிய விருதுகளுக்கான பரிந்துரைகள் நவம்பர் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் வருவாயி பாடல் சிறந்த உலக இசை நிகழ்ச்சி பிரிவில் இடம் பிடித்திருக்கிறது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து கிராமிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே பதிவு இதுதான் என்ற தகவலும் தமிழ் இசை ரசிகர்களுக்கு இன்னொரு பெருமையாக அமைந்திருக்கிறது.

விருது கிடைக்குமா

கிராமிய விருது கிடைக்குமா? என்பது பிப்ரவரி 7, 2027 அன்று நடைபெறும் விருது விழாவில் தெரியவரும். ஆனால் விருது கிடைப்பதற்கு முன்பே தமிழ் மொழியில் உருவான ஒரு பாடல் உலக அளவில் இந்த மேடையில் அங்கீகாரம் பெற்றிருப்பதே மிகப்பெரிய சாதனை தான். இதுவரை கிராமிய நாமினேஷன் என்றாலே சர்வதேச இசை கலைஞர்கள், ஆங்கில பாடல்கள், உலக இசை என நமக்கு தோன்றியிருக்கும். ஆனால் பாரதியார் எழுதிய ஒரு தமிழ் கவிதையை நவீன இசையில் உருவாக்கி, அதற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது தமிழ் இசைக்கும் ஒரு பெரிய அடையாளம்.

பாரதியார் எழுதிய கவிதைகள் இன்றும் புதிய தலைமுறையிடம் சென்று கொண்டு இருக்கின்றன என்பதற்கு இந்த வருவாயி பாடலும் ஒரு உதாரணம். இப்போது கிராமிய விருது மேடையில் தமிழ் பாடல் இடம் பெற்றிருப்பதால் அடுத்து இன்னும் பல தமிழ் சுயாதீன இசை படைப்புகளும் உலக அளவில் கவனம் பெற வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+