வி.எஸ். பாபு மரணம்.. கொளத்தூர் காலியானது! இடைத்தேர்தல் களம் யாருக்கு? மீண்டும் ஸ்டாலின் போட்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ். பாபு (வயது 75) இன்று பிற்பகல் 2.24 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் அவரின் கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

கடுமையான மூச்சுத்திணறல் காரணமாகக் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களுக்கும் மேலாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

VS Babu passes away

கொளத்தூர் தொகுதி காலி - இடைத்தேர்தல் களம்

வி.எஸ். பாபுவின் மறைவைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவைச் செயலகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இதன் மூலம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பான இடைத்தேர்தல் களம் உருவாகியுள்ளது.

தவெக வேட்பாளர் யார்? திமுகவில் ஸ்டாலின் போட்டியிடுவாரா?

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். தற்போது அந்தத் தொகுதி காலியாகியுள்ளதால், ஆளுங்கட்சியான த.வெ.க. சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வடசென்னையில் வலுவான செல்வாக்கு கொண்ட நிர்வாகி ஒருவரை விஜய் களமிறக்குவார் எனத் தெரிகிறது.

மறுபுறம், எதிர்க்கட்சியான தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்ததால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தனது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் மு.க. ஸ்டாலின் வழங்கியிருந்தார்.

மேலும், கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்திருந்தது. எனவே, இழந்த செல்வாக்கை மீட்கவும், சட்டமன்றத்திற்குள் மீண்டும் நுழையவும் மு.க. ஸ்டாலினே கொளத்தூரில் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது தி.மு.க.வின் வேறு மூத்த நிர்வாகி நிறுத்தப்படுவாரா என்பது அக்கட்சித் தலைமையின் முடிவிலேயே உள்ளது. அல்லது தலைவரை வீழ்த்திய தொகுதியே வேண்டாம் என்று கொளத்தூரை புறக்கணிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகள்

வி.எஸ். பாபுவின் மறைவால் கொளத்தூர் தொகுதியும் காலியானதைத் தொடர்ந்து, 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தற்போது மொத்தம் 6 இடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே 5 தொகுதிகள் காலியாக இருந்தன:

1. திருச்சி கிழக்கு (முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியானது)
2. பெருந்துறை (அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜினாமா)
3. கரூர் (அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜினாமா)
4. விராலிமலை (அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜினாமா)
5. அம்பாசமுத்திரம் (அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜினாமா)
6. கொளத்தூர் (த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவு)

சட்டமன்றத்தின் தற்போதைய கட்சிப் பலம்

கொளத்தூர் தொகுதி காலியான பிறகு, சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 228 ஆகக் குறைந்துள்ளது (பெரும்பான்மைக்குத் தேவை 115). கட்சிகளின் தற்போதைய பலம் பின்வருமாறு:

ஆளுங்கட்சி கூட்டணி (தவெக கூட்டணி- 117 இடங்கள் + வெளியிலிருந்து ஆதரவு 5 = 122)
தமிழக வெற்றிக் கழகம்: 108 (பாபு மறைவுக்கு முன் 109 ஆக இருந்தது)
காங்கிரஸ்: 5
விடுதலைச் சிறுத்தைகள்: 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 2
(வெளியிலிருந்து ஆதரவு: சி.பி.ஐ - 2, சி.பி.எம் - 2, சுயேச்சை - 1)

எதிர்க்கட்சி திமுக கூட்டணி ( 60 இடங்கள்):
தி.மு.க.: 59
தே.மு.தி.க. : 1

மற்றவை (அ.தி.மு.க. கூட்டணி - 46 இடங்கள்):
அ.தி.மு.க.: 41
பா.ம.க.: 4
பா.ஜ.க.: 1

ஒரு உறுப்பினரை இழந்தாலும், ஆளுங்கட்சியான தவெக கூட்டணிக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. முக ஸ்டாலினையே வீழ்த்திய தொகுதி என்பதால், கொளத்தூர் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+