எதிர்பார்த்ததை விட பாசிட்டிவாக அமைந்த பேச்சுவார்த்தை! டிரம்ப் பேசியதை ஆச்சரியமாக பார்த்த புதின்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பேசிய விஷயங்கள் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இதை பாசிட்டிவாக பார்த்திருக்கிறார்.

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா தொடர்ந்து முரண்பட்டு வந்திருந்தன. குறிப்பாக ரஷ்யாவும், சீனாவும் ஓரணியில் இருந்தாலும் அமெரிக்கா மட்டும் எல்லா விஷயங்களிலும் தனித்து செயல்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் மூன்று நாட்டு அதிபர்களும் இன்று ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். சீனாவின் ஷென்சென் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Trump s Remarks During China Trilateral Talks

இதில் டிரம்ப் பேசிய விஷயங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கின்றன. "இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்துவதன் மூலம் நானும், ஜி ஜின்பிங்கும், விளாடிமிர் புதினும் உண்மையிலேயே வரலாறு படைத்திருக்கிறோம். எங்கள் மூவருக்கும் விவாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. நாங்கள் ஏற்கனவே நிறைய விவாதித்திருக்கிறோம். நமது மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையான, மரியாதைக்குரிய மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலைப் நடத்துவதற்கான பொறுப்பு எங்களுக்க உள்ளது.

கருத்து வேறுபாடு என்பதால் மட்டுமே கடந்த கால தலைவர்கள், அந்தந்த நாடுகளுடன் பேசுவதை தவிர்த்ததை கேள்விக்கு உள்ளாக்க விரும்புகிறோம். இந்த சந்திப்பை நாங்கள் பாசிட்டிவாக பார்க்கிறோம். பிரச்சினைகளைப் பற்றிப் பேச மறுக்கும் பழைய முறையின் கீழ்.. எந்தப் பிரச்சினைகளும் ஒருபோதும் தீர்க்கப்படவில்லை.

அணு ஆயுத ஒழிப்பும், ஒத்துழைப்பும் முக்கியமானவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம், அவற்றை விட்டுவிடுவது மிகவும் கடினம். உக்ரைன் போர் குறித்து அந்த நாடுகள் விவாதிக்கும். இது தொடர்பாகத் நானும், புதினும் இன்று முன்னதாக நீண்ட உரையாடலை மேற்கொண்டோம்.

இங்கு அமர்ந்திருக்கும் நாங்கள் 3 பேரும் வேறு பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறோம். இதற்காக ஜி ஜின்பிங் மற்றும் புதினுக்கு நன்றி. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாடு, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு, பல்வேறு மிக முக்கியமான சிக்கல்களை கையாள்வதற்கான புதிய வாய்ப்புகளையும் அணுகுமுறைகளையும் கண்டறிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்த அறையில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். நம் அனைவருக்குமான ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இது உதவும் என்று நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய 3 அணுசக்தி வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள், பூமியில் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து விவாதிக்க சரியா நேரத்தில் ஒன்றுகூடியிருக்கின்றன" என்று கூறினார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், குறிப்பிடத்தக்க வகையில் டிரம்ப் தனது எழுத்துப்பூர்வமான உரையை முழுவதுமாகப் பின்பற்றினார். வழக்கம் போல் தன்னிச்சையாகப் பேசுவதற்காக இடையில் நிறுத்தவில்லை என்பதுதான். அதேபோல அணு ஆயுதங்களை குறைப்பது குறித்தும், 3 நாட்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை அணுகுவதை பாசிட்டிவான பாயிண்டிலும் டிரம்ப் பேசியதை புதின் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+