ஜெயலலிதா பாணியில் விஎஸ் பாபு.. 75 vs 72.. கடைசி வரை நீடித்த உடல்நிலை குறித்த மர்மம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:அரசியல் தலைவர்களின் மரணங்கள் பொதுவாக வெளிப்படையாகவே இருக்கும். ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு ஆகியோரின் உடல்நிலை விவரங்கள் கடைசி வரை வெளிப்படைத்தன்மையுடன் இல்லை. இருவருமே நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இருவருமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் சுமார் 70 நாட்களுக்கு மேலாக சிகிச்சைக்குப் பிறகு காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தது.

Kolathur MLA VS Babu

தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த சூழலில், கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு இன்று காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுமார் 72 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த விஎஸ் பாபு இன்று காலமாகி உள்ளார்.

முன்னதாக, விஎஸ் பாபு போலவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அப்போது மருத்துவமனை சார்பாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியானது. விஎஸ் பாபுவுக்கு எப்படி அறிவிப்புகள் வந்ததோ, அதுபோல்தான் அவருக்கும் வந்தது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாகவும், விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் அறிவிப்புகள் வெளியானது. ஆனால் மருத்துவமனையில் அடுத்த சில நாட்களிலேயே வெளிநாட்டில் இருந்து எல்லாம் மருத்துவர்கள் வந்தார்கள். ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும், இட்லி சாப்பிட்டார், காபி சாப்பிட்டார் என்று எல்லாம் வெளியில் ஆதரவாளர்கள் பேட்டி அளித்து வந்தனர். இந்நிலையில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இதில் விஎஸ் பாபு மற்றும் ஜெயலலிதா இருவரின் உடல்நிலை குறித்தும் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்கள் வெளியாகவில்லை. தங்களுக்காக செயல்படும் அரசியல் தலைவர்களின் மருத்துவத் தகவல்களில் பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. ஏனெனில், தனிநபர் மருத்துவ ரகசியம் என்று கூறினாலும், மக்கள் பிரதிநிதியின் செயல்பாட்டு நிலை குறித்த தகவல் பொதுமக்களுக்கு தெரிய வேண்டியது அவசியமாகும். ஏனெனில், நீண்டகாலம் மருத்துவமனையில் இருக்கும் எம்எல்ஏக்களின் தொகுதிப் பணிகள் கேள்விக்குள்ளாகும். அதேநேரம், மருத்துவமனை வெளியிடும் அறிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருப்பது இல்லை.

முன்னதாக, ஜெயலலிதா விவகாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்த பின்னரும், அரசியல் தலைவர்களின் உடல்நிலை தொடர்பான தகவல் வெளிப்படைத்தன்மை குறித்து தெளிவான நடைமுறை இதுவரை உருவானது போல் தெரியவில்லை. விஎஸ் பாபு உடல்நிலை குறித்து நீதிமன்றத்தில் வழக்கே தொடரப்பட்டிருந்தது. இந்த சூழலில் தான் தற்போது விஎஸ் பாபு உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடை தெரியாத கேள்விகள் என்றால், ஏன் தலைவர்களின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிவிக்க மருத்துவமனைகளால் முடியவில்லை? அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிடுகின்றனவா என்பது தான் கேள்விகளாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+