வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம் என்றார்கள்! திடீர் மறைவால் அதிர்ச்சி! மு.க.ஸ்டாலின் உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் இறப்புக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

MK Stalin

பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதே போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கலில் "கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த அடுத்த நாளான செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு 72 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

மருத்துவமனை புல்லட்டின்

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை உறுப்பினர் வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நுரையீரல் பிரச்சினை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பல்வேறு துறைகளின் மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. எனினும் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2.24 மணிக்கு காலமானார். இந்த கடினமான சூழலில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் இரங்கல்

வி.எஸ் பாபுவின் மறைவுக்கு முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,"கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அரைக் கம்பத்தில் தவெக கொடி

வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் இரங்கலில் தெரிவித்துள்ளார். வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி தவெக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+