காதலி மீனாட்சியை காப்பாற்ற திட்டம்? வாக்குமூலத்தில் பிளேட்டை மாற்றிய தனிஷ்க் நிஷாந்த்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் நிஷாந்த் கொடுத்த வாக்குமூலம் ஒன்று விவாதப்பொருளாகி உள்ளது.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீசாரின் விசாரணையில் இப்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரியில் கைது செய்யப்பட்டு மதுரைக்கு அழைத்து வரப்பட்ட முக்கியக் குற்றவாளி யூடியூபர் நிஷாந்த் (25), போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

crime madurai

வாக்குமூலத்தில் நிஷாந்த் சொன்ன புதிய காரணம்

முன்னதாக, இந்த வழக்கில் நிஷாந்தின் காதலியும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டபோது, "காதலி மீனாட்சி புதிதாகக் கட்டி வரும் வீட்டிற்குப் பணம் தேவைப்பட்டதாலும், அவரது கடனை அடைக்கவுமே நிஷாந்த் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டார்" என்ற தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது பிடிபட்டுள்ள நிஷாந்த், போலீசாரின் விசாரணையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு காரணத்தைக் கூறியுள்ளார். எனது யூடியூப் சேனலைப் பெரிய அளவில் வளர்ப்பதற்காகவும், எனது தந்தையின் கடன்களை அடைப்பதற்காகவுமே நான் நகைக்கடையில் கொள்ளையடித்தேன் என நிஷாந்த் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

காதலி மீனாட்சியைக் காப்பாற்ற முயற்சியா?

நிஷாந்தின் இந்தப் புதிய வாக்குமூலம் இப்போது சமூக வலைத்தளங்களிலும் காவல்துறை வட்டாரத்திலும் விவாதப் பொருளாகியுள்ளது. தனது காதலி மீனாட்சியை இந்தக் கொள்ளை வழக்கிலிருந்து முழுமையாகக் காப்பாற்றுவதற்காகவே, நிஷாந்த் இவ்வாறு பழி முழுவதையும் தன் மீது போட்டுக்கொள்கிறாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

ஏனெனில், தனக்குப் பணம் தேவைப்பட்டதால்தான் கொள்ளையடித்தேன் என்றும், தனது யூடியூப் சேனல் வளர்ச்சிக்காகவும் அப்பா கடனுக்காகவும் இதைச் செய்தேன் என்றும் நிஷாந்த் கூறுவதன் மூலம், "இந்தக் கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.. அவருக்காக நான் இதைச் செய்யவில்லை" என நிறுவ நிஷாந்த் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் ஆணையர் ஏற்கனவே உடைத்த உண்மை

ஆனால், நிஷாந்தின் இந்த வாக்குமூலத்தை போலீசார் எளிதில் நம்பிவிடத் தயாராக இல்லை. ஏற்கனவே மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மீனாட்சிக்குத் தெரிந்துதான் இந்தக் கொள்ளை நடந்துள்ளது. கொள்ளைக்கு முன்பும் பின்பும் நிஷாந்தும் மீனாட்சியும் செல்போனில் பேசிய உரையாடல்களை வைத்தே, இந்தச் சதியில் மீனாட்சிக்கும் உள்ள உடந்தை நிரூபணமாகியுள்ளது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, கொள்ளையடிப்பதற்கு முன்பு நகைக்கடையை நோட்டமிடச் சென்றபோதும், கொள்ளை நடந்த இரவிலும் மீனாட்சியின் இருசக்கர வாகனத்தையே நிஷாந்த் பயன்படுத்தியுள்ளார். கொள்ளையடித்த நகைகள் எங்கே மறைத்து வைக்கப்பட்டன என்ற விவரமும் மீனாட்சிக்குத் தெரிந்திருந்தது.

போலீஸ் காவலில் வெளிவரும் முழு உண்மை

காதலி மீனாட்சி மீதுள்ள அதீத காதலால், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க நிஷாந்த் நாடகமாடுகிறாரா அல்லது உண்மையிலேயே யூடியூப் சேனலுக்காகவும் தந்தை கடனுக்காகவும் இதைச் செய்தாரா என்பது குறித்து போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.

தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள நிஷாந்தை, காவல்துறைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, செல்போன் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை முன்வைத்து நடக்கும் விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+