நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது கந்தூரி விழா! சந்தனக்கூடு ஊர்வலத்தைக் காண நாகூரில் குவியும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தாபூத்து எனப்படும் சந்தனக்கூடு ஊர்வலம் இன்று மாலை நாகையில் இருந்து தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் அனைத்து மதங்களைச் சேர்ந்த பக்தர்கள் நாகூரில் குவிந்து வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா, மத நல்லிணக்கத்திற்கும், ஆன்மீக ஒற்றுமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது.

Nagore Dargah

இத்தகைய சிறப்புமிக்க தர்காவின் 470-வது கந்தூரி விழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தாபூத்து எனப்படும் சந்தனக்கூடு ஊர்வலம் இன்று மாலை நாகையில் இருந்து தொடங்க உள்ளது. இதற்காக சந்தனக்கூடு ஊர்வலத்தில் பங்கேற்கவும், ஆண்டவரின் அருளைப் பெறவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகூருக்கு வருகை தந்து வருகின்றனர்.

இதனால் நாகூர் தர்கா வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தர்காவின் அலங்கார நுழைவுவாயில் பகுதியில் இசை நிகழ்ச்சிகள், மேளதாளங்கள் மற்றும் பாரம்பரிய வாத்திய இசைகள் முழங்க விழாக்கோலம் பூண்டுள்ளது. சந்தனக்கூடு ஊர்வலத்தை வரவேற்கும் வகையில் தர்கா வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காட்சியளிக்கிறது.

இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்வில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மதங்களைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது கந்தூரி விழா, நாகை மாவட்டத்தில் ஆன்மீக உற்சாகத்தையும் மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில் களைகட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+