நடிகர் அஸ்வினுக்கு நாளை கல்யாணம்.. மணப்பெண் யாரு தெரியுமா? பிரபல இயக்குனர் குடும்பத்து மகள்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. குறிப்பாக பெண்கள், குடும்ப ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த வரவேற்பு சாதாரணமானது கிடையாது. சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று வந்தவர் ஒரு சமையல் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவர் வாழ்க்கையில் முக்கிய அடுத்த கட்டம் தொடங்கப் போகிறது. அவருக்கு நாளை கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது. அவரை திருமணம் செய்ய போகும் பெண் யார் தெரியுமா? மறைந்த பிரபல இயக்குனரின் பேத்திதான்.
அஸ்வின் குமாருக்கும், புவனேஸ்வரிக்கும் நாளை நவம்பர் 20ஆம் தேதி அவரின் சொந்த ஊரான கோவையில் கல்யாணம் நடக்க இருக்கிறது. மணப்பெண் புவனேஸ்வரி யார் என்றால் மறைந்த இயக்குனர் ராஜசேகரின் பேத்தி என்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம். அதுபோல இயக்குனர் ராஜசேகர் ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாப்பிள்ளை, மாவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அதேபோல கமல்ஹாசன் நடித்த விக்ரம், காக்கி சட்டை, தர்மதுரை போற்ற படங்களிலும் அவருடைய இயக்குனர் பயணம் முக்கியமானதாக இருந்திருக்கிறது.

அஸ்வின் மனைவி யார்
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக இருந்த ராஜசேகர் 43 வயதிலேயே இறந்துவிட்டார். அவருடைய குடும்பத்தை சேர்ந்த புவனேஸ்வரி இப்போது அஸ்வினின் வாழ்க்கை துணையாக இணைய இருக்கிறார். அஸ்வின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு கோவையில் இருந்து சென்னைக்கு வந்தவர். இன்ஜினியரிங் முடித்திருந்தாலும் இவருக்கு சினிமா தான் முக்கியம் என்று அதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
சீரியலில் நடிப்பு
அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் இரட்டைவால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே மணிரத்தினம் இயக்கிய "ஓ காதல் கண்மணி" படத்திலும் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அஸ்வினை எல்லோருக்கும் தெரிந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான்.
குக் வித் கோமாளி பிரபலம்
அந்த நிகழ்ச்சியில் சிவாங்கி இவரை கிண்டல் செய்வது, இவர் பின்னாடியே சுற்றிக் கொண்டிருப்பது போன்ற செயல்களால் இவருக்கும் அதிக பிரபலம் கிடைத்து விட்டது. அதற்கு பிறகு பெண்களின் கிரஷ் ஆகவே மாறிவிட்டார். ஆனால் அதுதான் பலருக்கு இவர் மீது பொறாமையை ஏற்ப்படுத்தியது. ஒரு படத்தின் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும்போது நான் கதைகள் கேட்கும் போது தூங்கி விடுவேன், என்னுடைய அழகுக்கு காரணம் என்னுடைய அப்பா அம்மா தான் என்று அவர் எதார்த்தமாக பேச அதுவே சோசியல் மீடியாவில் ட்ரோல் மெட்டீரியலாக மாறிவிட்டது.
திருமண வாழ்க்கை
இவருக்கு எதிராக பலரும் வீடியோஸ் வெளியிட்டு வந்தனர். அதையும் தாண்டி இப்போது அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னை பற்றி ட்ரோல்களுக்கு எல்லாம் உருக்கமாக பேசியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இப்போ அவருடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்.
சினிமாவில் பெரிய ஹீரோவாக வர வேண்டும் என்று ஆசையோடு கோவையில் இருந்து கிளம்பி சின்னத்திரையில் அறிமுகமாகி, குக் வித் கோமாளி மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து இப்போது திருமண வாழ்க்கையில் இணைய போகும் அஸ்வினுக்கு அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ஆனால் மணப்பெண் போட்டோ மட்டும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் நாளை திருமணத்திற்கு பிறகு தான் அந்த போட்டோஸ்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.




Click it and Unblock the Notifications
