கொளத்தூர் தொகுதியில் திமுக, அதிமுக பலம் என்ன? கடந்த 4 தேர்தல்களில் பெற்ற வாக்குகள்
சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஸ் பாபு காலமானதால் அந்த தொகுதி காலியாகியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் விஎஸ் பாபுவிடம் தோல்வி அடைந்திருந்தாலும், அதற்கு முன்பு திமுகவின் கோட்டையாகவே கொளத்தூர் தொகுதி இருந்து வந்துள்ளது. கடந்த 4 தேர்தல்களில் திமுக, அதிமுக பெற்ற வாக்குகள் என்ன என்பதை இங்கு காணலாம்.
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏவாக இருந்த விஎஸ் பாபு இன்று காலமானார். 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஎஸ் பாபு இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஎஸ் பாபு மறைவு காரணமாக கொளத்தூர் தொகுதி காலியாகியுள்ளது.

கொளத்தூரில் மீண்டும் மு.க ஸ்டாலின் போட்டி?
இதனால், அந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கொளத்தூர் எம்.எல்.ஏ விஎஸ் பாபு மறைவால் 6 தொகுதி காலியாகியுள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்த தொகுதி என்பதால், இந்த தொகுதியில் திமுக சார்பில் அவரே களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
தவெக சார்பில் விஎஸ் பாபு மகன் நிறுத்தப்பட உள்ளாரா? என்ற பேச்சும் அடிபட தொடங்கியுள்ளது. கொளத்தூர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், அந்த இடைத்தேர்தல் பொதுத்தேர்தலுக்கு நிகரான பரபரப்புடன் நடைபெறும் என்றே தெரிகிறது. கொளத்தூர் தொகுதியில் திமுக, அதிமுக இதற்கு முன்பு பெற்ற வாக்குகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தல்:
கடந்த பொதுத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றி பெற்றது. முதல் முறையாக தேர்தலை சந்தித்த தவெக 82,997 வாக்குகள் பெற்றது. மொத்தம் 45.09 சதவீதம் பெற்று இருந்தது. திமுக சார்பில் போட்டியிட்ட முன்னால் முதல்வர் ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்றார். திமுக 40.32 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து இருந்தது. அதிமுக சார்பாக போட்டியிட்ட பி சங்கீதா பாண்டியன் 18,430 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 5,046 வாக்குகள் கிடைத்தன.
2021 சட்டமன்ற தேர்தல்
2021 சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் 1,05,522 வாக்குகள் பெற்று வெற்றியை பெற்றார். மொத்தம் 60.86 சதவீத வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பாக ஆதி ராஜாராம் களமிறங்கினார். அதிமுக வெறும் 35,138 வாக்குகள் மட்டுமே வெற்றி பெற்றது. 20.27 சதவீத வாக்குகள் பெற்று இருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஜெகதீசு குமார் 14,210 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்ற தேர்தல்
2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது. திமுக சார்பில் போட்டியிட்ட மு.க ஸ்டாலின் 91,303 வாக்குகள் வெற்றி பெற்றார். அதிமுக சார்பாக தற்போதைய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் போட்டியிட்டார். அவர் 55,573 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுக 54 சதவீத வாக்குகளும், அதிமுக 31 சதவீத வாக்குகளும் பெற்றது. கொளத்தூர் தொகுதியில், கடந்த தேர்தலில் திமுக தோற்றாலும், திமுகவின் கோட்டையாகவே கடந்த காலங்களில் இருந்துள்ளது.





Click it and Unblock the Notifications
