3,195 ஸ்பெஷல் அரசு பஸ்கள் அறிவிப்பு.. சென்னையில் எந்தெந்த தேதிகளில் எங்கிருந்து இயக்கம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வார இறுதி நாட்களில் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சேலம் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, வார இறுதி பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 3,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன..!!

சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சிறப்பு வார ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் புதன்கிழமை தோறும் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

Government Buses

சேலம் டூ கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

இந்த ரயில் புதன்கிழமை இரவு 8.03 மணிக்கு சேலம், 9.15 மணிக்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 8.20 மணிக்கு ஈரோடு, 9.27 மணிக்கு சேலம் வந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை சிறப்பு ரயில்கள்

அதேபோல திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் ரயில், காலை 11.40 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

மேலும், தாம்பரம், காட்பாடி, விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வார இறுதியில் 3,195 சிறப்பு பேருந்துகள்

இந்த நிலையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மொத்தம் 3,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு 1,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 390 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மகிழ்ச்சியில் பயணிகள்

அதேபோல், மாதவரத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 290 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து 875 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, வார இறுதி நாட்களை முன்னிட்டு மொத்தம் 3,195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+