தூத்துக்குடி அரசு பெண் டாக்டர் பின்னாடியே போன 3 பேர்.. ஆடுகளுக்கு வைத்தியம் பார்க்க வந்து இப்படியா

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அரசு பணியிலுள்ள பெண்களுக்கே இதுபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், அவர்களின் பாதுகாப்பு என்ன என்பதே கேள்விக்குறியாகி விடுகிறது.. தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் டாக்டரை திருமணம் செய்து கொள்ளுமாறு 3 பேர் டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் உச்சக்கட்ட அதிருப்தியும், மனஉளைச்சலும் அந்த பெண் டாக்டர் போலீஸ் ஸ்டேஷனுக்கே புகார் தர சென்றுவிட்டார்.. திண்டுக்கல்லில் என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கணபதி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் அரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

Thoothukudi Government

திண்டுக்கல் பெண் டாக்டர்

இந்த மருத்துவமனைக்கு மீரான்குளத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் ஜான்சன் என்பவர் தனது ஆடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவருடன் நொச்சிக்குளத்தை சேர்ந்த சந்தன மரியான் மகன் ஜேசுராஜ் (47) என்பவரும் வந்துள்ளார்.

அப்போது பெண் டாக்டர் மீது ஜேசுராஜுக்கு விருப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் கூடுதல் பணிக்காக வெளியே செல்லும் நேரங்களில் ஜேசுராஜ் பின்னாடியே சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் டாக்டர், ஜேசுராஜை கடுமையாக கண்டித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து ஜான்சனிடமும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு கோபப்பட்ட ஜான்சன், ஜேசுராஜை கண்டிப்பதாக சொல்லியிருக்கிறார்.

அரசு கால்நடை மருத்துவர்

ஆனால், அதன்பிறகும் ஜேசுராஜின் தொந்தரவு நிற்கவில்லை. ஜான்சனும் இதில் சேர்ந்து கொண்டு, தன்னுடைய மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு, பெண் டாக்டரை பின்தொடர்ந்து தொந்தரவு தந்திருக்கிறார்.

கடந்த மாதம் 6-ம் தேதி கலுங்குவிளையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது பைக்கில் அங்கு வந்த ஜேசுராஜும், ஜான்சனும் பெண் மருத்துவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, காரியாண்டி பார்பரம்மாள்புரத்தை சேர்ந்த சிலைஸ்டன் மனைவி மரிய ஞானம் என்பவரும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.. பெண் டாக்டருக்கு போனை போட்ட மரிய ஞானம், "ஜேசுராஜை கல்யாணம் செய்து கொள்" என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

இப்படி 3 பேருமே தொடர்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தவும், பெண் மருத்துவர் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

திருமண டார்ச்சர்

இந்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். இதில் ஜேசுராஜ், ஜான்சன், மரிய ஞானம் ஆகிய 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஜேசுராஜை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜான்சன் மற்றும் மரிய ஞானம் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்..

அரசு பணியில் இருக்கும் பெண் டாக்டரை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாக எழுந்துள்ள இந்த புகார், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+