அண்ணாமலையாருக்கு சொன்ன அரோகரா.. இப்போ உலகம் முழுவதும் கேட்கிறது! ஓம் பட நடிகர் உருக்கம்
சென்னை: தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ஓம் படத்தை பார்த்துவிட்டு, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் நடிகர் லல்லு. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓம் படத்தை பற்றியும் இயக்குனர், ராஜ்குமார் பெரியசாமியுடன் தனது பயணத்தை பற்றியும் பேசி இருக்கிறார். அதிலும் அவர் சொன்ன ஒரு விஷயம் ரொம்பவே ஸ்பெஷல்.
நடிகர் லல்லு பேட்டி
அப்போது பேசிய அவர், "கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தின் போது, மலை உச்சியில் இருந்து தான் சொன்ன "அண்ணாமலையனுக்கு அரோகரா" என்ற கோஷம் இன்று உலகம் முழுவதும் ஒலிப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை குறிப்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த கதையை உலகம் முழுவதும் கொண்டு சென்றிருப்பது தனக்கு பெருமையான தருணம், தான் பிறந்து வளர்ந்த ஊரில் தனது படத்தின் முதல் ஷோ பார்த்திருப்பது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் அவர் பேசி இருக்கிறார்.

மூன்று படத்தில் தொடர்ச்சி
மேலும், ராஜ்குமார் பெரிய சாமியுடன் ரங்கூன், அமரன், இப்போது ஓம் என தொடர்ந்து 3 படங்களில் நடித்திருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். இயக்குனருடன் தொடர்ந்து 3 படங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் முதல் படத்திலிருந்து இயக்குனருடன் பயணித்து அவர் பெரிய அளவில் கவனம் பெறும் படங்களை இயக்கும்போது அந்த குழுவில் தொடர்ந்து இடம் பிடித்திருப்பது லல்லுவுக்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது.
தற்போது ஓம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. தனுஷின் நடிப்பு, மம்முட்டியின் ஸ்கிரீன் பிரசன்ஸ், சாய் பல்லவியின் கேரக்டர், சாய் அபயங்கரின் பின்னணி இசை, இடைவேளை காட்சி உள்ளிட்ட சில விஷயங்களுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. ஒரு சிலர் படத்தின் நீளம், கதை, பிரசன்ஸ், வேகம் போன்றவற்றை விமர்சித்தும் வருகின்றனர். இப்படி கலவையான விமர்சனங்களை படம் பெற்று வந்து கொண்டிருக்கும் சமயத்தில் அந்த படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தாலும் தனக்கு பெரிய சந்தோஷம் என்று லல்லு பேசியது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஓம் படத்தின் கதை
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்திற்கு பிறகு உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை என்னவென்று பார்த்தால் செம்மரக்கட்டை கடத்தல் பின்னணியில் நடக்கும் ஸ்பை திர்ல்லர் தான். இதில் தனுஷ், மம்முட்டி, ஸ்ரீ லீலா, நாசர், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வழக்கமான மசாலா ஆக்சன் படமாக இல்லாமல் இது கடத்தல் கும்பலின் பின்னணியில் வித்தியாசமான கதையில் பயணிக்கிறது.
முதல் நாள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்பது இனி தான் தெரியும். ஆனால் தனது சொந்த ஊரின் பின்னணியில் உருவான படத்தில் நடித்துவிட்டு அதே ஊரில் முதல் நாள் படம் பார்த்து அண்ணாமலை தரிசனம் செய்திருக்கும் லல்லுவுக்கு இந்த நாள் நிச்சயம் மறக்க முடியாத நாளாகவே இருக்கும். குறிப்பாக 2022 கார்த்திகை தீபத்தை நினைவையும் இன்றைய பட வெளியீட்டையும் இணைத்து அவர் பேசி இருப்பது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.



Click it and Unblock the Notifications
