Dhanush OM: ஓம் ரிலீஸ்.. தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. சென்னையில் வெறிச்சோடிய தியேட்டர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் படத்திற்கு காலை 6 மணி ஷோக்கு பெர்மிஷன் கிடைத்ததுமே, ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராக இருந்தனர். ஆனால் இன்று வெளியாகியிருக்கும் ஒம் படத்திற்கு சென்னையில் சில முக்கிய தியேட்டர்களில் காட்சி இல்லாததால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. படம் பார்க்க திட்டமிட்ட ரசிகர்கள் சிலர், தியேட்டர்களில் படம் வெளியாகாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாசலில் நின்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Dhanush OM Movie OM Release Chennai Theatres Tamil Cinema

வருத்தத்தில் ரசிகர்கள்

தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி என பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ஓம் படத்தில் முதல் நாளே தியேட்டரில் பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று சில இடங்களில் ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில முக்கிய தியேட்டர்களில் படம் வெளியாகாததால் ரசிகர்கள் எதிர்பார்த்த முதல் நாள் கொண்டாட்டம் நடக்கவில்லை.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஓம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. சந்தன மரக்கட்டை கடத்தல் பின்னணியில் ஒரு ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி, ஸ்ரீ லீலா உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர் ஃபார் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து தனுஷ், மம்முட்டி கூட்டணி மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் மம்முட்டி நடித்த தளபதி படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல இந்த படமும் இருக்குமா? என்று பலரும் காத்திருந்தனர். அதனால் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக பலர் முன்கூட்டியே டிக்கெட் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சென்னையில் ரோகிணி, வெற்றி போன்ற பிரபல திரையரங்குகளில் ஓம் படம் வெளியாகாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இதற்கு பின்னால் வினோஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட வருவாய் பங்கு பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush OM Movie OM Release Chennai Theatres Tamil Cinema

பங்கீடு பிரச்சனை

படத்தை விநியோகம் செய்யும் ஏஜிஎஸ் நிறுவனம் 70 - 30 என்ற பங்கு சதவீதத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வருவாய் பங்கீடு தங்களுக்கு ஏற்றதாக இல்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கருதியதால் சில தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் இருக்க முடிவு செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த பிரச்சனை நேற்று இரவுகள் முடிவுக்கு வந்து பட வெளியீடு சுமுகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் உடன்பாடு எட்டபடாததல் சில தியேட்டர்களில் ஓம் வெளியாகவில்லை.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 50 சதவீத திரையரங்குகளில் மட்டுமே படம் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் ஓம் படம் முதல் நாள் முன்பதிவு நல்ல வரவேற்பு பெற்றதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இன்னொரு பழக்கம் தியேட்டர் பங்கு பிரச்சனையால் சில இடங்களில் படம் வெளியாகாமல் இருப்பது படத்தில் முதல் நாள் கொண்டாட்டத்தையே பாதித்திருக்கிறது. இந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர் பிரச்சனை எப்போது முடிவுக்கு வந்து, விடுபட்ட திரையரங்குகளில் படம் வெளியாகும்? என்பதுதான் இப்போது தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+