"எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா".. பாகிஸ்தான் மாணவர் கேள்விக்கு ராகுல் சொன்ன நெத்தியடி பதில்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ''இந்தியா - பாகிஸ்தான் மாற்றி மாற்றி குற்றம்சாட்டுவதை தாண்டி பரஸ்பர நன்மைகளை மனதில் வைத்து இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?'' என்று பாகிஸ்தான் மாணவர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

Rahul Gandhi

அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் நிபுணரான பேராசிரியர் ராபர்ட் பேப் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏாளமான மாணவர்கள் பங்கேற்று ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த குஷ் என்பவர் எழுந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி எழுப்பினார்.

அப்போது, ''இந்தியா - பாகிஸ்தான் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொள்வதை தாண்டி இருநாடுகளும் பரஸ்பர நன்மைகளுக்காக இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ராகுல் காந்தி, ''வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பெரிய சிக்கலும் உள்ளது. அது என்னவென்றால் பாகிஸ்தான் நம் நாட்டில் பயங்கரவாதத்துக்கு ஆதரவும், ஊக்கமும் அளிப்பது தான். அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படும் சூழலில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது'' என்று பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+