நடிகை சமந்தாவுக்கு குழந்தை பிறந்தது.. பெயரையும் அறிவிச்சுட்டாரே! அர்த்தம் இது தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சமந்தாவிற்கு குழந்தை பிறந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நேற்று நவம்பர் 19ஆம் தேதி சமந்தா மற்றும் அவரது கணவர் ராஜ் நெடிமோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தங்களுடைய குழந்தையின் பெயரையும் புகைப்படத்தையும் சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். குழந்தையின் விரல்களை இருவரும் பிடித்தபடி இருக்கும் அந்த அழகான புகைப்படத்துடன் குழந்தைக்கு "தேவ் நிடிமோரு" என்று தங்களது மகனின் பெயரையும் அறிவித்திருக்கிறார்.

சமந்தா குழந்தையின் பெயர்

சமந்தா குழந்தைக்கு தேவ் என்று பெயர் வைத்திருப்பதும் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. தேவ் என்பது சமஸ்கிருத வேரைக் கொண்ட பெயர். கடவுள், தெய்வீகமானவர், இறை சக்தி போன்ற அர்த்தங்களை குறிக்கிறது. சின்னதாகவும் அழகாகவும் இருக்கும் இந்த பெயருக்கு ஒரு ஆழமான அர்த்தமும் இருக்கிறது. சமந்தா வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாகவே பல மாற்றங்கள் நடந்திருக்கிறது.

Samantha

அடுத்தடுத்த பிரச்சனை

உடல்நல பிரச்சனைகள், அவருடைய முதல் திருமண வாழ்க்கையையும் விவாகரத்தில் முடிந்து, அடுத்தடுத்து படங்களும் தோல்வியடைந்தது. ஆனால் கடந்த வருடத்தில் இயக்குனர் ராஜ் நெடிமோருவை திருமணம் செய்து கொண்ட பிறகு சமந்தாவின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்த வெற்றியே கிடைத்தது. அவர் தயாரித்து, நடித்த, "எங்கள் தங்கம்" திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி விட்டது. அதற்கு பிறகு அவர் கர்ப்பமான செய்தியையும் அறிவித்திருந்தார்.

கர்ப்பத்தை அறிவிப்பு

தனது படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதும், அந்த வெற்றியோடு அவர் கர்ப்பமான செய்தியை அறிவித்ததும் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அப்போது கொஞ்ச நாட்களுக்கு நான் சினிமாவில் நடிக்க போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். அதற்கு பிறகு வளைகாப்பு நிகழ்ச்சிகள், குடும்பத்தினருடன் பூஜை, சடங்குகள் என அவர் கர்ப்ப காலம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கூட வீட்டில் நடந்த வளைகாப்பு புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருந்தார்.

விடுமுறையே இல்லை

தான் கர்ப்பமாக இருந்தாலும் சினிமாவுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்த சமந்தா, தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதிலும் சோனி லைவ்வில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் ஹெஸ்ட் ஆக இருந்து வந்தார். இந்த நிலையில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தோடு அவர் வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி, பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+