திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி.. உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், நவம்பர் 24 கார்த்திகை தீபத்தன்று மட்டும் ஒரு முறை தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

Thiruparankundram

அதேபோல் நவம்பர் 24 கார்த்திகை தீபத்தன்று மட்டும் ஒரு முறை தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. கோயில் நிர்வாகம், அதிகாரிகள் மட்டும் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்றலாம்.

தீபம் ஏற்ற யாரை அனுமதிக்கலாம் என்பதை மதுரை ஆட்சியர் முடிவு செய்வார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் போராட்டம், பேரணி, முழக்கங்கள் எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு வழங்கவும், தேவைப்பட்டால் சிஐஎஸ்எஃப் படையை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் திருப்பரங்குனறம் மலையில் உள்ள தர்காவுக்கு செல்ல தடை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தரப்பில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட போது, உடனடியாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு காவல்துறை தரப்பில், We will face the consequences என்று பதில் அளிக்கப்பட்டது.

தற்போது தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், நிபந்தனைகளுடன் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் வலுவான வாதங்களை முன் வைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+