நடிகை மிருணாளினிக்கு கல்யாண களைகட்டிடுச்சு! 7 வருட காதலுக்கு அடுத்த கட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் ஒரு காலத்தில் மிருணாளினி ரவியின் டப்ஸ்மாஷ் வீடியோக்களை பார்க்காதவர்களே இருக்க முடியாது. சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கள், முகபாவனைகள் என வீடியோக்களில் கலக்கியவர், அப்படியே சினிமாவுக்குள் வந்து நடிகையாகவும் வளர்ந்தார். இப்போது அவருடைய வாழ்க்கையில் இன்னொரு அழகான அத்தியாயம் தொடங்க போகிறது. மிருணாளினியின் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த நவம்பர் மாதம் சினிமா பிரபலங்களின் திருமண செய்திகளுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலான மாதமாகவே இருக்கிறது. முதலில் இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறனை கிரீஸில் திருமணம் செய்துகொண்ட செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதேபோல நடிகை பிரியா பவானி சங்கரும் தனது நீண்ட நாள் காதலரான ராஜ்வேல் ராஜை திருமணம் செய்துகொண்டு புகைப்படங்களைப் பகிர்ந்தார். இப்போது அந்த வரிசையில் மிருணாளினி ரவியின் திருமண கொண்டாட்டங்களும் கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன.

Mrunalini ravi

கையில் மெஹந்தி

மிருணாளினியின் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. கையில் மருதாணியுடன் திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண் கோலத்தில் அவர் இருப்பதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளைப் பொழிந்து வருகிறார்கள். தோழிகளுடன் சேர்ந்து கொண்டாடும் காட்சிகளும், அவரை சுற்றி இருக்கும் மகிழ்ச்சியான சூழலும் இந்த புகைப்படங்களுக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன.

மெஹந்தி மட்டுமில்லாமல் சங்கீத் நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. நெருங்கிய தோழிகள் மிருணாளினிக்காக பகிர்ந்திருக்கும் வாழ்த்துகளும் கவனம் பெற்றுள்ளன. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குள் செல்லும் தோழியை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தியிருப்பது இந்த கொண்டாட்டத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியிருக்கிறது.

Mrunalini ravi

ஏழு வருட நட்பு

மிருணாளினியின் திருமண செய்தி ரசிகர்களுக்கு திடீரென வந்தது போலத் தோன்றினாலும், இந்த காதல் பயணம் ஏழு வருடங்களுக்கு முன்பே தொடங்கியிருக்கிறது. சர்ச்சைக்கு பெயர் போன ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவருடன் நீண்ட காலமாக நட்பில் இருந்த மிருணாளினி, பின்னர் அவரை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற மகிழ்ச்சியான செய்தியை மிருணாளினியே சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

அப்போது மகாவிஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அவர், ஒவ்வொரு பிறவியிலும் உன்னைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்ற அர்த்தத்தில் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். மகாவிஷ்ணுவும் 7 வருட நட்பு தனது வாழ்க்கையின் காதலாக மாறியிருப்பதாகப் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுகளைப் பார்த்த ரசிகர்கள் அப்போதே இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மகாவிஷ்ணு பரம்பொருள் அறக்கட்டளையை நிறுவி ஆன்மீகப் பேச்சாளராகவும் இருக்கிறார். இப்போது நிச்சயதார்த்தத்துக்கு பிறகு திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி வருவதால், இருவருடைய திருமணத்தையும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். ஆனால் திருமணத் தேதி, இடம் உள்ளிட்ட விவரங்களை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சினிமாவில் தனி அடையாளம்

மிருணாளினியை பற்றி பேசும்போது அவருடைய சினிமா பயணத்தை மட்டும் சொல்லிவிட்டு கடந்து போக முடியாது. ஏனென்றால், அவர் முதலில் ரசிகர்களிடம் அறிமுகமானதே சமூக வலைதள வீடியோக்கள் மூலமாகத்தான். டிக்டாக், டப்ஸ்மாஷ் என அந்த காலத்தில் பிரபலமாக இருந்த தளங்களில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த முகபாவனைகளும், இயல்பான நடிப்பும் அவருக்கு பல ரசிகர்களை உருவாக்கின.

அதன்பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'சாம்பியன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு விஷாலுடன் எனிமி, சசிகுமாருடன் எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, விக்ரமுடன் கோப்ரா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.
குறிப்பாக 'எனிமி' படத்தில் இடம்பெற்ற 'டும் டும்' பாடல் மிருணாளினியை இன்னும் அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் திருமண நாளில் இந்த ஜோடியின் புகைப்படங்கள் எப்போது வெளியாகும் என்பதுதான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+