மீண்டும் தனிஷ்க் நகைக்கடைக்குள் நுழைந்த நிஷாந்த்.. வீட்டுக்கும் அழைத்து சென்ற போலீஸ்.. தடதடத்த மதுரை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்திடம் போலீசார் இப்போது நேரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். கொள்ளை நடந்த கடைக்கே அவரை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். மேலும், அவரது வீட்டுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் போலீசார் தெரிந்துகொள்ள முயற்சிப்பது என்ன? இன்றைய விசாரணையில் என்ன நடக்கிறது?

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்த் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Madurai Tanishq Robbery

5 நாள் கேட்ட போலீஸ்.. ஒருநாள் மட்டுமே அனுமதி!

ஆனால், நிஷாந்த் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தையும் போலீசாரிடம் நிஷாந்த் ஒப்படைத்து விட்டார். எனவே 5 நாட்கள் விசாரணை தேவையில்லை, நிஷாந்த் தனக்கு பயமாக இருப்பதாகவும் சொல்கிறார். ஏற்கனவே நிஷாந்த்துக்கு வலது தோள்பட்டையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை தாக்கியிருக்கிறார்கள்" என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

இதற்கு போலீஸ் தரப்பில், "கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, நிஷாந்த் தப்பிச் செல்ல யாராவது உதவினார்களா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது" என்றனர்..

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜபிரபு, நிஷாந்த்தை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், நிஷாந்த்தை விசாரணையின்போது எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்கக்கூடாது, சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதி அளிக்கலாம் என்றும் நீதிபதி நேற்றைய தினம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

நகைக்கடைக்கு அழைத்துச் சென்ற போலீஸ்!

இந்த நிலையில், ஒருநாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நிஷாந்தை போலீசார் கொள்ளை நடந்த தனிஷ்க் நகைக்கடைக்கு அழைத்து சென்றனர். அங்கு கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது, எந்த வழியில் நகைகளை எடுத்துச் சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலேயே அவரிடம் கொள்ளை நடந்த விதம் குறித்து கேட்டறிந்தனர்.

மாடக்குளம் வீட்டிலும் விசாரணை

தொடர்ந்து நிஷாந்தை மாடக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கும் போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கும் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தினர். ஏற்கனவே இந்த வழக்கில் 3 ஆட்டோக்கள் மற்றும் டூவிலர்கள் தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ள நிலையில், வாகனங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

மொத்தமும் வீடியோ பதிவு

நிஷாந்திடம் போலீசார் நடத்தும் விசாரணை முழுவதையும் வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். கொள்ளையின்போது பயன்படுத்தப்பட்ட முகமூடிகள், வாகனங்கள், அவருக்கு உதவியவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருநாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் நிஷாந்தை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+