ஐகோர்ட் உத்தரவுக்கு தடை.. ஆனாலும் தீபம் ஏற்ற அனுமதி! திருப்பரங்குன்றம் உத்தரவில் உள்ள சட்ட நுணுக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் வரும் நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்தன்று திபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதியும் வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தீபம் ஏற்ற எப்படி அனுமதி கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இருப்பினும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

Thiruparankundram Deepam

நீதிமன்றம்

கடந்த இரு நாட்களாகவே இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. 24ம் தேதி தீபம் ஏற்றப்படும் நிலையில், அதற்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நேற்றைய தினம் இடைக்கால உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நேற்று எந்தவொரு உத்தரவும் வரவில்லை. இன்றைய தினமும் விசாரணை தொடர்ந்தது.

இறுதியில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். அதேநேரம் நவம்பர் 24ம் தேதி மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை அனுமதி வழங்கினர். இதுவே பலருக்கும் கேள்வியை எழுப்பியது. ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய நிலையில், எப்படி தீபம் ஏற்றவும் அனுமதி அளித்தனர் என்பதே பிரதான கேள்வியாக எழுந்தது.

சட்ட நுணுக்கம்

இதில் தான் முக்கியமான சட்ட நுணுக்கம் உள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்துக்காக மட்டும் தனியாக ஒரு தற்காலிக ஏற்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. அதாவது உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த அனுமதி அளிக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்றமே தனது இடைக்கால உத்தரவின் மூலம் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற வழிவகை செய்துள்ளது.

கட்டுப்பாடுகள்

இந்த அனுமதிக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபத்தூண் பகுதிக்கு செல்ல முடியும். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. தீபம் ஏற்றும் நேரம், செல்லும் வழி, பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுடன் இணைந்து முடிவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பையும் போடலாம்.

அடுத்த ஆண்டும் தீபம் ஏற்ற முடியுமா?

முடியாது. இந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதிக்காக வழங்கப்பட்ட ஒருமுறை அனுமதியை அடுத்த ஆண்டுக்கு தானாகவே நீட்டிக்க முடியாது. இந்த உத்தரவு இறுதி உத்தரவாகவோ அல்லது எதிர்காலத்தில் இதே உரிமையை கோருவதற்கான ஆதாரமாகவோ அமையாது. அடுத்தாண்டு தீபம் வரை வழக்கின் இறுதி விசாரணை முடிவடையாமல் இருந்தாலும் கூட இந்த உத்தரவை மட்டும் அடிப்படையாக கொண்டு அடுத்த ஆண்டு தீபம் ஏற்ற உரிமை கோர முடியாது. அதற்கு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு தேவைப்படும். இதுதான் உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கும், நிரந்தர உரிமைக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+