தாஜ்மஹால் – மசூதிலாம் போகக்கூடாது.. இந்தியா வந்த பாகிஸ்தான் அமைச்சருக்கு மத்திய அரசு சொன்ன ‘நோ’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவுக்கு வந்தோமோ.. போனோமானு இருக்க வேண்டுமே தவிர தாஜ்மஹால், நிஜாமுதீன் தர்கா உள்ளிட்டவற்றை எல்லாம் பார்க்க முடியாது என்றுபாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக்கிற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

Pakistan Minister

டெல்லியில் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை 'எஸ்இஓ' எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைப்பு கடந்த 2001ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பில் அதன் உறுப்பு நாடுகள் எல்லாம் பங்கேற்கின்றனர். அதன்படி பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு இருந்தாலும் கூட மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை பாகிஸ்தான் சார்பில் அந்த நாட்டின் பருவநிலைக்கான அமைச்சர் முசாதிக் மாலிக் பங்கேற்க உள்ளார்.

டெல்லி வரும் முசாதிக் மாலிக் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட விரும்பினார். குறிப்பாக உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள ஆக்ராவில் அமைந்து இருக்கும் தாஜ்மஹால், டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வர விரும்பினார். இதுதொடர்பாக மத்திய அரசிடம் அனுமதியும் கோரப்பட்டது. ஆனால் மத்திய அரசு அனுமதி கொடுக்க மறுத்து விட்டது.

பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் எஸ்இஓ மீட்டிங்கில் மட்டுமே பங்கேற்க வேண்டும். வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2023ம் ஆண்டில் எஸ்இஓ மீட்டிங்கிற்காக பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியா வந்தார். கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு இப்போது அமைச்சர் முசாதிக் மாலிக் வருகை தந்துள்ளார்.

கடந்த ஆண்டு தான் நமக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததது. 'ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது இருநாடுகளின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா வரும் அமைச்சர் முசாதிக் மாலிக்கிற்கு தாஜ்மஹால், நிஜாமுதீன் தர்கா உள்ளிட்டவற்றை பார்வையிட மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+