UPSC தேர்வில் பாஸாகிட்டீங்களா? அப்ப ரூ 50 ஆயிரம் பிடிங்க! தமிழக அரசு அறிவிப்பு! நவ.30 கடைசி நாள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, யு.பி.எஸ்.சி ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ 50 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் நாடு அரசின் யு.பி.எஸ்.சி ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026

Tamil nadu government

தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்: (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், (https://skilldevelopment.tn.gov.in/) ஆன்லைன் மூலம் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+