திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படுவதை.. தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.. நன்றி சொன்ன அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து, இடையூறு இன்றி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி கூறியுள்ள அண்ணாமலை, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை நீதிமன்றம் வழங்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதேபோல் நவம்பர் 24 கார்த்திகை தீபத்தன்று மட்டும் ஒரு முறை தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது.

Annamalai

கோயில் நிர்வாகம், அதிகாரிகள் மட்டும் செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பல்வேறு நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. அதன்படி, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்றலாம். அந்த நபர்களை மாவட்ட ஆட்சியரே முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் மலை உச்சியில் இருப்பது கல் தூண் என்று தான் தொடர்ச்சியாக வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இருப்பினும் இந்த ஆண்டில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தவெக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில், வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+