நயினார் நாகேந்திரன் நேரடி அட்டாக்.. 1 மணி நேரத்திற்கு ரூ.25 லட்சமா? கோவில் பணம் எங்கே போகிறது?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தர்மத்துக்கு கிடைத்த வெற்றி என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றத் தீர்ப்பையும் வரவேற்றுள்ளார்.. அதேசமயம், தமிழக அரசின் செயல்பாடு வேதனையளிப்பதாகவும், தீபம் ஏற்றக்கூடாது என வழக்கு தொடர்ந்ததற்கு அரசு எவ்வளவு செலவு செய்தது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானது. தர்மம் வென்றுள்ளது. இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறோம்.

Nainar Nagendran

நெல்லையில் நயினார் நாகேந்திரன்

கடந்த கால அரசும் தற்போதைய அரசும் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனையை உருவாக்கி வருகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின்படி அனைவரும் சட்டத்தின் முன் சமம். 25 மற்றும் 26-வது பிரிவுகளின்படி தனிமனித மத உரிமைகள், வழிபாட்டு உரிமைகள் அனைவருக்கும் உண்டு. தமிழக அரசு இந்த மூன்று சட்டப் பிரிவுகளையும் மதிக்காமல் செயல்படுவது வேதனையளிக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை கோவில் விழாக்களை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறை. ஆனால், கோவிலில் தீபம் ஏற்றக்கூடாது, வழிபாடு நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்துள்ளது.

கோவில் காணிக்கைகளை செலவு செய்யும் அறநிலையத்துறை, வழக்குகளுக்காக பெரும் தொகையை செலவிடுகிறது. ஒரு மணி நேரம் வாதாட வழக்கறிஞர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுவதாகவும், அறநிலையத்துறை சார்பில் ஒரு வழக்கு, மாவட்ட ஆட்சியர் சார்பில் மற்றொரு வழக்கு என இரண்டு வழக்குகளுக்கு தனித்தனி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டுமே இதுபோன்ற செயல்பாடுகள் நடைபெறுகின்றன. ஆட்சி மாறினாலும் இந்த விவகாரத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

வெள்ளை அறிக்கை

தீபம் ஏற்றக்கூடாது என வழக்கு தொடர்ந்ததற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கடந்த 2025-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த வேதனை ஏற்பட்டிருக்காது. இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளிலும் தீபம் ஏற்ற நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல் திருப்பரங்குன்றத்திலும் தீபம் ஏற்ற வேண்டும். பெரும்பான்மை சமுதாயத்தினர் கோவிலில் தீபம் ஏற்றுவதால் மதச்சார்பின்மை பாதிக்கப்படாது. பிரச்சினையை தூண்டிவிடுவது தமிழக அரசுதான். இஸ்லாமிய அமைப்புகள் எந்த பிரச்சனையும் செய்யாத நிலையில் அவர்களை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

ஆட்சியே போச்சே

தீபம் ஏற்றுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செயல்படுவது வருத்தமளிக்கிறது. திமுக அரசையும் தமிழக வெற்றிக் கழக அரசையும் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டுகிறேன். தீபம் ஏற்றாததால் கடந்த ஆட்சி போய்விட்டது. தற்போதைய அரசும் இதே தவறை செய்தால் ஆட்சியை இழக்க நேரிடும். தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு முருகப்பெருமான் மீதான பக்திக்கு கிடைத்த வெற்றி. மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் அரசியல் செய்கிறார்" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி ஹேப்பி

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வரும் நிலையில், பாஜகவும் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால், இதே விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளதுடன், வழக்குக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளது, அரசியல் களத்தின் வனத்தை பெற்று வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+