என் மனைவி பெயரும் காமாட்சி! இதுக்கும் மதுரை எம்பி போஸ்ட் போடுவாரோ! பயமா இருக்கு! GR.சுவாமிநாதன் கலகல
மதுரை: "காமாட்சி என்பது எனது மனைவி பெயர். நான் சாதாரணமாக கூறிய கருத்துக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஏதாவது பதிவு போடுவாரோ, தற்போது எனக்கு பயமாக இருக்கிறது" என உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். புத்தக கொள்முதல் குறித்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் காமாட்சி தரப்பு வாதத்தை முன் வைத்த போது நீதிபதி இவ்வாறு கலகலப்பாக கூறியிருந்தார்.
அண்மையில் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சுவாமிநாதன் நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு சு.வெங்கடேசன் என்ன மாதிரியான பதிலை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடரபாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நூலகங்களில் சோதனை நடத்தி வந்தனர்.
மேலும் மாவட்ட நூலகங்களில் போலி நூல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
எதிர்மனுதாரர்
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் காமாட்சி என்பவர் தரப்பு வாதம் இன்று முன் வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "காமாட்சி என்பது நல்ல பெயர். என் மனைவி பெயரும் காமாட்சிதான். நான் ஏதோ சாதாரணமாக சொன்னேன். இதுக்கும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஏதாவது பதிவு போட்டுடுவாரோனு பயமாக இருக்கு" என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். அண்மைக்காலமாக ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும் சு.வெங்கடேசனுக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது.
நடந்தது என்ன?
சென்னையில் நடந்த "மகா பெரியவா" நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜி.ஆர். சுவாமிநாதன், "பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் போலி புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது. அங்கு இந்த புத்தகங்களை அகற்றிவிட்டு "மகா பெரியவா" நூல்களின் அனைத்து பாகங்களையும் இடம் பெற செய்தால் மட்டுமே முறைகேடால் ஏற்பட்ட பாவம் போகும் என நான் மனசார நம்புகிறேன் என்றார்.
ட்விட்டரில் பதிலடி
நீதிபதியின் இந்த பேச்சுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்திருந்தார்."பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.
"மகா பெரியவர்கள்"
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என கூறியிருந்தார்.
ஆடம்பர கம்யூனிஸ்ட்
இதற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த புத்தக கொள்முதல் வழக்கின் போது நீதிபதி சுவாமிநாதன் ஒரு தகவலை தெரிவித்தார். அதில் ஆடம்பர கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசன் என விமர்சித்திருந்தார். நீதிபதி கூறியிருப்பதாவது: "சு.வெங்கடேசன் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் உயர் ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வருகிறார்.
மெர்சிடிஸ் கார், பிராண்டட் சர்ட்
சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற தயாராக இருந்த போது ரயில் நிலையத்திற்கு வெளியே வந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை பார்த்தேன். அதிலிருந்து இறங்கிய நபர் கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியாக இருப்பார் என முதலில் நினைத்தேன்.
எங்கே போறீங்கன்னு கேட்டாரு!
ஆனால் அவர் அணிந்திருந்த டிசர்ட், ஷூ எல்லாமே பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளாகவே இருந்தன. இதையடுத்துதான் அவர் மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் "எங்கே போறீங்கன்னு" கேட்டார். நான் வழக்கமாக ஸ்லீப்பர் வகுப்பில்தான் பயணம் செய்வேன். எனது பெட்டி எஸ் 3- சீட் நம்பர் 23 என்றேன். இப்போது அவர் ஒரு நீதிபதியாக நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கே அறிவுரை கூறுகிறார் என சு.வெங்கடேசனின் விமர்சனத்திற்கு சுவாமிநாதன் பதிலடி கொடுத்தார். இதற்கு மதுரை எம்பி தனது பதிவில், நான் ரயில் நிலையத்திற்கு வந்தது எனது கார் இல்லை, எனக்கு இதுவரை சொந்தமாக கார் கிடையாது என தெரிவித்திருந்தார். இப்படியாக அவர்களுக்குள் வார்த்தை மோதல் எழுந்துள்ளது.




Click it and Unblock the Notifications
