"பென்ஸ் கார், பிராண்டட் சர்ட்! ஆடம்பர கம்யூனிஸ்ட்!" ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு சு.வெங்கடேசன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: "ரயில் நிலையத்தில் நான் வந்து இறங்கியது எனது கார் இல்லை, எனக்கு இன்று வரை சொந்த கார் ஏதுமில்லை" என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது.

madurai su venkatesan gr swaminathan

நான் இரயில்நிலையம் வந்திறங்கிய கார் கொண்டு விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன.

அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; ஸ்லீப்பர் வகுப்பில் பயணிப்பதால் ஒருவர் சொல்வது சரியாகிவிடாது.

இது போன்ற ஒப்பீட்டை அறிவார்ந்த சமூகம் எடைபோட மறக்காது. எந்த ஒரு மனிதர் மீதான சமூகத்தின் நன்மதிப்பும் அவரது கருத்துகளாலும் செயல்களாலும் உருவாகிறது. நாங்கள் அணியும் சட்டைக்காகவும், வந்திறங்கும் காருக்காகவும், பயணிக்கும் வகுப்புக்காகவும் இன்னும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறோம்.

இக்கேள்வி "தூய்மை மற்றும் எளிமை" எனும் எங்களின் கோட்பாடு சார்ந்து முன்வைக்கும் போது அதற்கு பொறுப்போடு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியொரு பெருமைமிகு கட்சியால்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

ஆனால், ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் நாங்கள் நிற்கும் தரப்புக்காக பெருமையோடு என்றும் முன்நிற்போம். ஏனெனில் இந்தப் போராட்டம் எங்களோடு தொடங்கியதும் இல்லை; எங்களோடு முடியப்போவதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜி.ஆர்.சுவாமிநாதன் விமர்சனம்

கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடரபாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நூலகங்களில் சோதனை நடத்தி வந்தனர்.

மேலும் மாவட்ட நூலகங்களில் போலி நூல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேட்டை தொடர்ந்து நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமசுப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "சு.வெங்கடேசன் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் உயர் ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வருகிறார்.

மெர்சிடிஸ் கார்

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற தயாராக இருந்த போது ரயில் நிலையத்திற்கு வெளியே வந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை பார்த்தேன். அதிலிருந்து இறங்கிய நபர் கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியாக இருப்பார் என முதலில் நினைத்தேன்.

பிராண்டட் சட்டை

ஆனால் அவர் அணிந்திருந்த டிசர்ட், ஷூ எல்லாமே பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளாகவே இருந்தன. இதையடுத்துதான் அவர் மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் "எங்கே போறீங்கன்னு" கேட்டார். நான் வழக்கமாக ஸ்லீப்பர் வகுப்பில்தான் பயணம் செய்வேன். எனது பெட்டி எஸ் 3- சீட் நம்பர் 23 என்றேன். இப்போது அவர் ஒரு நீதிபதியாக நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கே அறிவுரை கூறுகிறார் என சு.வெங்கடேசனின் விமர்சனத்திற்கு சுவாமிநாதன் பதிலடி கொடுத்தார்.

மகா பெரியவா புத்தகம்

முன்னதாக சென்னையில் நடந்த "மகா பெரியவா" நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜி.ஆர். சுவாமிநாதன், "பெரியார் அறிவுலக நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகத்தின் போலி புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது. அங்கு இந்த புத்தகங்களை அகற்றிவிட்டு "மகா பெரியவா" நூல்களின் அனைத்து பாகங்களையும் இடம் பெற செய்தால் மட்டுமே முறைகேடால் ஏற்பட்ட பாவம் போகும் என நான் மனசார நம்புகிறேன் என்றார்.

நீதிபதிக்கு எம்பி பதில்

நீதிபதியின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளன. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு பதிலளித்து சு.வெங்கடேசன் தனது பதிவில் கூறியிருப்பதாவது: "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

நூலக கொள்முதல்

நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என கூறியிருந்தார். சு.வெங்கடேசனின் இந்த ட்வீட்டிற்கு பென்ஸ் கார், பிராண்டட் சர்ட் குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விமர்சித்திருந்தார். அதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடிக் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+