"உங்க பசி அடங்கவே அடங்காதா".. ஊழியர்களின் ஊதிய உயர்வு எங்கே? தனியார் நிறுவனங்களுக்கு மோடி வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''உங்கள் பசி அடங்காதது. எவ்வளவு கொடுத்தாலும் உங்கள் வயிறு நிறைவதே இல்லை. நீங்கள் (தொழிலதிபர்கள்) உங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தினீர்களா? பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தீர்களா? இது இப்படியே தொடர முடியாது. உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்'' என கார்ப்பரேட் உள்பட பிற தனியார் நிறுவனங்களை காட்டமாக சாடி கடும் வார்னிங் செய்துள்ளார் பிரதமர் மோடி.

your-appetite-is-so-insatiable-i-feel-ashamed-pm-modi-slams-with-warning-to-corporate-sector

''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தான் செயல்படுகிறது. அதற்கேற்ப தான் அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கிறது'' என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு கண்டுக்கொள்வது இல்லை. பெரிய பெரிய நிறுவனங்களுக்கு தேவையான கடன், கடன் மீதான வட்டி குறைப்பு, புதிய தொழில் தொடங்குவதற்கும், தொழிலை விரிவுப்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுக்கிறது. இந்நிலையில் தான் தான் பிரதமர் மோடி திடீரென்று டென்ஷனாகி கார்ப்பரேட் நிறுவனங்களை கடுமையாக சாடி உள்ளார். அதோடு வார்னிங்கும் கொடுத்துள்ளார்.

இது டெல்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டில் தான் நடந்தது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

உங்கள் பசி அடங்கவே அடங்காது

''2014ல் பெருநிறுவனங்களுக்கான வரி (Corporate Tax) விகிதம் 30 சதவீதமாக இருந்தது. அதனை நாங்கள் 22 சதவீதமாக குறைத்தோம். இன்றைய தேதியில் நம் நாட்டில் ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி இல்லை. நீங்கள் கைதட்ட மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இது எனக்கு நன்றாகவே தெரியும்.

ஏனென்றால், உங்கள் பசி அடங்காதது. எவ்வளவு கொடுத்தாலும் உங்கள் வயிறு நிறைவதே இல்லை. , உங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தினீர்களா? உங்கள் நிறுவனங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தீர்களா? என்றால் இல்லவே இல்லை. 'மோடி அவர்களே, நீங்கள் உங்களின் வேலையை பாருங்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என சொல்வது தெரிகிறது. இது இப்படியே தொடர முடியாது.

வெட்கமாக இருக்கிறது

140 கோடி மக்கள் தொகை நம் நாட்டில் மார்க்கெட் பலமாகவும், சவாலாகவும் உள்ளது. நீங்கள் எதை உற்பத்தி செய்தாலும் அது எப்படியும் விற்றுவிடும் என்பது உங்களுக்கு தெரியும். யாரோ ஒருவர் அதை வாங்கத்தான் போகிறார்கள். பெரிய நகரத்தில் உள்ளவர்கள் வாங்கவில்லை என்றால், சிறிய நகரத்தில் உள்ளவர்கள் வாங்குவார்கள். சிறிய நகரத்தில் உள்ளவர்கள் வாங்கவில்லை என்றால், பெரிய நகரங்களில் இருப்போர் வாங்குவார்கள். ஆனால், இது இப்படியே நீடிக்க முடியாது.

நீங்கள் உங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். எனக்கு வெட்கமாக இருக்கிறது. நம் நாட்டு மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கக்கூடாதா? இந்த மனநிலை மாற வேண்டும். என் நாட்டு மக்கள் தரமான பொருட்களை பெறத் தகுதியானவர்கள்" என காட்டமாக விமர்சனம் செய்தார்.

மோடியின் கோபத்துக்கு என்ன காரணம்?

பிரதமர் மோடியின் இந்த கோபத்துக்கு பின்னால் முக்கிய விஷயம் உள்ளது. நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டில் பிரதமரானார். 12 ஆண்டுகளாக பிரதமராக தொடர்ந்து வருகிறார். இந்த சமயத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் மீதான அடிப்படை கார்ப்பரேட் வரி விகித்தத்தை தொடர்ந்து குறைத்து வந்தார். 2014ல் இந்த அடிப்படை கார்ப்பரேட் வரி பெரும்பாலான நிறுவனங்களுக்கு 30 சதவீதமாக இருந்தது. இதில் கூடுதல் வரி, செஸ் உள்ளிட்டவற்றை சேர்த்தால் 34.94 வரை சென்றது. இது தொழில் நிறுவனங்களை பாதிக்கும் என்று படிப்படியாக அந்த வரி குறைக்கப்பட்டது. 2016-17ல் நிதி ஆண்டில் ரூ.5 கோடி வருமானத்துக்கு மிகாமல் உள்ள சிறிய நிறுவனங்களுக்கான வரி 29 சதவீதமாகவும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதகமாக (சலுகைகள் கிடையாது) அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்பிறகு 2017ல் ரூ.50 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதமாகவும், 2018 ல் இந்த சலுகை ரூ.250 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கும் , 2019 -2020 பட்ஜெட்டில் ரூ.400 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான அடிப்படை கார்ப்பரேட் வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டது. 2019 செப்டம்பரில் பொருளாதார மந்த நிலையை சமாளிக்கவும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கவும் வரி திருத்த சட்டத்தின்படி அடிப்படை கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. உள்நாட்டு நிறுவவனம் எந்தவித சிறப்பு வரி விலக்குகளையும் கோராமல் இருந்தால் இதனை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டது.

ஊழியர்களுக்கு பலனில்லை

இதன் மூலம் கார்ப்பரேட் உள்ளிட்ட பிற தனியார் நிறுவனங்களுக்கான வரி சுமை குறையும். நிறுவனங்கள் நன்றாக இயங்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை கிடைக்கும். வரிக்கு செலவிட வேண்டிய பணத்தை சம்பள உயர்வாக பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் என்று மத்திய அரசு நினைத்தது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதனால் தான் பிரதமர் மோடி அதிருப்தியடைந்து கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டமாக விமர்சனம் செய்து கடும் வார்னிங் கொடுத்துள்ளார். 'நம் நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்க வரி குறைப்பு போன்ற விஷயங்களை செய்தால் அதன் பலன்களை, ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி அவர்களுக்கு வழங்கவில்லை'' என்று விமர்சனம் செய்துள்ளார்.

காந்தி சொன்னதையாவது கேளுங்கள்

மேலும் பிரதமர் மோடி பேசும்போது '' சிந்தித்துப் பாருங்கள்.. இப்போது நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1930களில் காந்திஜி இங்கே வந்து இதே கருத்தை சொன்னார். இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று நான் அதே விஷயத்தை சொல்ல வேண்டி உள்ளது. இது உங்கள் வெற்றியா அல்லது தோல்வியா? என் பேச்சை கேட்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் காந்திஜியின் பேச்சையாவது கேளுங்கள். அவரும் 'சுதேசி' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) குறித்து பேசினார். நூறு ஆண்டுகள் நிறைவடைந்தும், நாம் இன்னும் அதே இடத்தில்தான் நின்று கொண்டிருக்கிறோம்.

தொழிலதிபர்கள் இந்தியா தான் 'பர்ஸ்ட்' என்ற வகையில் செயல்பட வேண்டும். இந்த அணுகுமுறையை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். மருந்து, எஃகு, அலுமினியம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இறக்குமதியை குறைக்க வேண்டும். இந்த துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். பொறியில் சார்ந்த துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

தலை நிமிர்வதா? தலை குனிவதா?

நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. நாம் தலை நிமிர்ந்து நிற்பதா அல்லது தலை குனிந்து நிற்பதா? என்பதை நீங்கள்தான் (தொழில்துறை) தீர்மானிக்க வேண்டும். இந்தியா 'உலகின் மருந்தகம்' என்று அழைக்கப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளுக்கான மூலப்பொருட்கள், இடைநிலை மருந்து பொருட்களை நாம் இறக்குமதி தான் செய்கிறோம்.
இப்படியாக இறக்குமதியை சார்ந்து இருப்பதில் பல பிரிவுகள் உள்ளன. எந்தெந்த மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் என்பதை நமது மருந்து துறை கண்டறிய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களிலும், பெரிய உற்பத்தி ஆலைகளிலும் முதலீடு செய்வதன் மூலம், மற்ற நாடுகளுடன் போட்டியிடும் திறனை நாம் பெற முடியும். மருந்து தயாரிப்பில் நமக்கு ஏற்கனவே வலிமை உள்ளது. இனி அதற்கான மூலப்பொருள் தயாரிப்பிலும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

இந்தியா பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு தாதுவை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் எஃகு பொரட்களை இறக்குமதி செய்கிறோம். நாம் எந்த ரகத்திலான எஃகு பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்று தொழில்துறை சிந்திக்க வேண்டும். அதன் மூலம் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும். அலுமினிய துறையிலும் இதே போன்ற வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான டன் பாக்சைட் தாது இருப்பு உள்ளது. இருந்தபோதிலும், நாம் சிறப்பு அலுமினிய கலவைகள் மற்றும் பிற தயாரிப்புகளை இறக்குமதி செய்கிறோம். இத்தகைய பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா மிகப்பெரிய நாடாக இருந்தபோதிலும், உலகளாவிய விவசாய ஏற்றுமதியில் அதன் பங்கு வெறும் 2-2.5% மட்டுமே இருக்கிறது. இந்த துறையில் முதலீடு செய்ய தயக்கம் உள்ளது. அதனை மறந்து முதலீடு செய்ய வேண்டும். ஒரு நாடு தனது விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், தொழில்துறைகள், செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோரை மதிக்கும்போது மட்டுமே முன்னேறும். இதனால் ஒவ்வொருவரும் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகளவில் உள்ள மார்க்கெட்டுகளை புரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்'' என அறிவுரையும் வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+