ஓம் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? சாய் பல்லவி தான் ஹீரோ.. புலம்பும் தனுஷ் ரசிகர்கள்
சென்னை: ஓம் படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தியேட்டரில் ரிலீஸாகி இருக்கிறது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருப்பதாலயே படத்தை பற்றிய ஆர்வமும் ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அதிலும் மிரட்டலான ட்ரெய்லரை பார்த்து படம் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மணக்கோட்டை கட்டி வைத்திருந்தனர். ஆனால் படம் வெளியான பிறகு தனுஷ் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் பலரும் கலவையான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சிலருக்கு படம் பிடித்து இருக்கிறது, அவர்கள் சோசியல் மீடியாவில் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஆனால் இன்னும் ஒரு சில ரசிகர்கள் நாங்கள் இன்னும் எதிர்பார்த்தோமே ஆனால் இப்படி ஆகிடுச்சு என்று தலையில் அடிச்சுக்காத குறையாக சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

ஓம் படத்தின் குறைகள்
அதிலும் ஒரு சிலருக்கு ஆதங்கம் என்னவென்றால், இந்த படத்தில் ஹீரோ தனுஷ் இல்ல... சாய் பல்லவி தான். அதுதான் எங்களுக்கு வருத்தமா இருக்கு, எங்க தலைவர் படத்தை பார்க்க வந்தால் இங்கே சாய்பல்லவிக்கு ஹெல்ப் பண்றதுக்காக தனுஷ் இருப்பது போல இருக்கிறது என்று சிலர் கொள்கிறார்கள். அதுபோல இன்னும் சிலர் படத்தின் முதல் பாதி சுமாராக இருக்கிறது, இரண்டாம் பாதி பரவாயில்லை. படத்தின் 3 மணி நேர நீளம் படத்திற்கு பெரிய மைனஸ், அரைமணி நேரத்திற்கு முன்பு படத்தை முடித்து இருந்தால் ஓகேவாக இருக்கும். அதிலும் சாய் பல்லவி கேரக்டரை தூக்கி விட்டு தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் இன்னும் வேற லெவலில் இருக்கும், தனுஷ் தனக்கான நடிப்பை சரியாக செய்திருந்தாலும் அவரை விட சாய் பல்லவி ஸ்கொயர் பண்ணிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.
மம்முட்டியின் கேரக்டர்
மம்முட்டி சொன்னது போல, அவரை சும்மா கூப்பிட்டு 6 மாசம் இழுத்தடித்து இருக்கிறார்கள்.
அவர் எவ்வளவு சேலஞ்ச்சான கேரக்டரை எல்லாம் பண்ணி இருக்கிறார், அப்படிப்பட்டவருக்கு இதெல்லாம் ஒரு ரோலா? இப்படி உப்பு சப்பு இல்லாத கேரக்டருக்கு மம்முக்காகவை கூட்டிட்டு வந்து அசிங்கப்படுத்திவிட்டீர்களே என்று மம்முட்டி ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பி வருகிறார்கள். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் படம் நல்லா தாங்க இருக்கு, இந்த படத்தை பற்றி தேவையில்லாத வதந்திகள் பரப்புறாங்க. படத்தை பற்றிய பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் படம் சூப்பர் தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்
அடுத்தடுத்து தோல்வி படங்கள்
அதுபோல படத்தை காப்பாற்றி இருப்பது சாய் அவயங்கர் தான். அவர் பின்னணி இசையில் படம் பார்க்க முடிகிறது, மற்றபடி படத்தில் ஒன்றும் இல்லை என்று சிலர் அவர்கள் பங்குக்கு இசையை மட்டும் கொண்டாடுகிறார்கள். ஆனால் இதே இசையை சிலர் கலாய்க்கவும் செய்கிறார்கள். காதில் கேட்கவே முடியவில்லை, டம்மு டம்முன்னு சத்தம் மட்டும்தான் வருது என்று சிலர் சொல்கிறார்கள். ஏற்கனவே தனுஷுக்கு சமீப காலமாக வந்த இட்லி கடை, கரா போன்ற படங்கள் எல்லாம் ப்ளாப் ஆகிவிட்டது. அந்த வரிசையில் இந்த படமும் போய்விடுமா? இனியாவது தனுஷ் கதையை நன்றாக கேட்டு நடிக்க வேண்டும் என்று தனுஷ் ரசிகர்களே அவருக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள்.
இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி இருக்கிறது. அதுவும் அமரன் படத்துக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய கூட்டணிக்கு ஏற்ற ஸ்ட்ராங்கான படமாக இது அமையவில்லை. மம்முட்டியின் கேங்குக்குள் தனுஷ் நுழையும் பகுதியை இன்னும் சுவாரசியமாக சொல்லி இருக்கலாமே என்பதும் பலருடைய எதிர்பார்ப்பு.
ஒரு ஸ்பை திரில்லர் என்பதால் தனுஷ் மம்முட்டியின் கேங்கில் எப்படி நுழைகிறார்? அவர்களுடைய நம்பிக்கையை எப்படி சம்பாதிக்கிறார்? எப்போது சந்தேகம் உருவாகிறது? என்று விறுவிறுப்பாக மைண்ட் கேம்ஸ் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். இந்த விஷயங்களை இன்னும் விரிவாகவும், சுவாரசியமாக சொல்லி இருக்கலாம். ஆனால் பல இடங்களில் இது ஒரு தகவலாக மட்டும்தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. நாமாகவே இது இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க வேண்டியது இருக்கிறது என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
