ஓம் படம் எப்படி இருக்கு? தனுஷ் எனர்ஜி, மம்முட்டி ஸ்க்ரீன் பிரசன்ஸ்.. இன்டர்வெலில் இருக்கும் டுவிஸ்ட்
சென்னை: தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ஓம் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது, என்பதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். டிரைலரை பார்த்தபோது ஒரு அதிரடி படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு படம் அதைவிட கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதாக ரசிகர்களின் முதல் பாதி விமர்சனங்கள் இருக்கிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பு, மம்முட்டியின் ஸ்கிரீன் பிரசன்ஸ், இன்டர்வெல் காட்சி என சில விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.

ஓம் ட்விட்டர் ரிவியூ
படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ஸ்பை த்ரில்லர் பாணியில் கதை நகர்வதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் வேகமாக சொல்லிவிட்டு போகாமல், கதைக்குள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து சென்று அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பை உருவாக்குகிறதாம். தனுஷை நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு எனர்ஜியான கதாபாத்திரத்தில் பார்ப்பது நன்றாக இருப்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
மம்முட்டியின் ஸ்கிரீன் பிரசன்ஸ்
மம்முட்டி திரையில் வரும் காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அவருடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு ஒரு கூடுதல் பலமாக இருப்பதாகவும், தனுஷ் மற்றும் மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் கவனிக்க வைப்பதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. சாய் அபயங்கரின் இசையும் படத்தில் வரும் காட்சிகளுக்கு நல்ல தாக்கத்தை கொடுத்திருப்பதாக சிலர் சாயை பாராட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே மம்முட்டி, "எனக்கு கொடுத்தது ஒரு ரோலா, 45 நாளுன்னு சொல்லி 6 மாசம் நடிக்க வச்சுட்டாங்க" என்று விமர்சித்து இருந்தார். ஆனால் அதுவெல்லாம் சும்மா கலாய்ப்பு என்பது போலத்தான் இருக்கிறது. மம்முட்டியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பராகவே இருக்கிறது என்று பலரும் பாராட்டுகிறார்கள்.
படத்தில் பிளஸ்
படத்தில் குறிப்பாக சிங்கிள் ஷார்ட் காட்சி, அலாகலோவா பாடல், சந்தன கட்டை கடத்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களின் கவனம் பெற்று இருக்கின்றன. அதிலும் இன்றுவள் வருவதற்கு முன்பு கதையில் உருவாகும் பதற்றமும் அதை தொடர்ந்து வரும் எமோஷனலான இன்டர்வெல் பிளாக் நல்ல அனுபவத்தை கொடுத்திருப்பதாக சில ரசிகர்கள் பதிவிட்டு இருக்கின்றனர்.

படத்தின் குறைகள்
இன்டர்வெல் முடியும் இடத்தில் வரும் உணர்வுபூர்வமான திருப்பம் இரண்டாம் பாதி மீது இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் படத்தின் நீளம் காரணமாக சில இடங்களில் மெதுவாக நகர்வதாகவும், ஆங்காங்கே சிறிய தொய்வுகள் இருப்பதாகவும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் படம் சுவாரசியமாகவே போய்க்கொண்டிருக்கிறது. கதைக்காக வைக்கப்பட்ட காட்சிகள், படத்தின் ஸ்பை, திரில்லர் தன்மைக்கு பொருத்தமாக இருக்கிறது என்ற கருத்துகள் தான் அதிகமாக இருக்கிறது.
முக்கியமாக தனுஷுக்காக தனியாக மாஸ் காட்சிகள், அடிதடிகள் என இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதன்படி படம் எடுக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். ட்ரைலரில் பார்த்த கதையின் அடிப்படையிலேயே முதல் பாதி நகர்ந்தாலும், இன்டர்வெல் முடிவில் எதிர்பாராத எமோஷனல் பிளாக் இருப்பது படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது. இப்போதைக்கு முதல் பாதி விமர்சனங்களை வைத்து பார்த்தால் ஓம் ஒரு வழக்கமான மாஸ் படமாக இல்லாமல் கதையையும், கதாபாத்திரத்தை நம்பி செல்லும் ஸ்பை திர்லராக ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.
இன்டெர்வெல் வரை நல்ல பெர்ஃபார்மன்ஸ் செய்து கொண்டிருப்பதாக பலர் சொல்லிக் கொண்டிருந்தாலும், இரண்டாவது பாதியில் இந்த கதையை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எப்படி கொண்டு செல்கிறார்? முதல் பாதியில் உருவான பரபரப்பை இறுதிவரை தக்க வைக்கிறாரா? என்பதுதான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. முழு படத்தின் விமர்சனம் இரண்டாவது பாதியை பார்த்த பிறகுதான் முடிவு செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications
