ஓம் உட்பட.. தனுஷ் படங்கள் தொடர்ந்து தோற்க காரணம் என்ன?
சென்னை: தனுஷ் நடித்து இன்று ரீல்ஸ ஆகியுள்ள ஓம் திரைப்படம், புஷ்பா, துரந்தர், விருமாண்டி என எல்லா படத்தையும் மிக்சியில் போட்டு அடித்து கொடுக்கும் முயற்சியில், எது மாதிரியும் வராமல், புது மாதிரியாய்.. அதுவும் ஒரு மாதிரியாய் வந்துள்ளதால் ரசிகர்களே தியேட்டர்களில் கொட்டாவி விடும் நிலை.
இதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கும் முன்பாக, கோலிவுட் ட்ரோல் என்ற பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இந்த அவதானிப்பையும் ஒருமுறை படித்துவிடுங்கள். அது இதுதான்.. கடந்த 10 வருடங்களில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் தவிர்த்து, மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து பெரும்பாலான ரசிகர்களைத் திருப்திப்படுத்திய ஒரே தனுஷ் படம் திருச்சிற்றம்பலம் மட்டும்தான். அந்தப் படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இதற்கிடையில் அவர் சேர்ந்து வேலை பார்த்த வெங்கி அட்லூரி, அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா, ஆனந்த் எல். ராய், விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி என அனைவருமே திறமையான இயக்குநர்கள்தான். அவர்களிடம் இதற்கு முன்போ அல்லது பின்போ சிறப்பான படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தனுஷ் என்று வரும்போது மட்டும் ஏன் சொதப்பிவிடுகிறது என்பது புரியவில்லை.

தனுஷ் நன்றாக நடிப்பார் என்பது ஊரறிந்த விஷயம். இனியும் அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் இனி No Comeback, Only Throwback தான்! See less. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே தனுஷின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்று சினிமாத்துறையினரிடம் பேச்சு கொடுத்தபோது, அவர்கள் கூறிய தகவல்கள் இதோ- தனுஷ் சிறந்த நடிகர்தான். படங்களையும் எடுக்க தொடங்கிவிட்டார். எனவேதான், இயக்குநர்களின் ஸ்க்ரிப்ட் ஒர்க்கில் அவரது தலையீடு அதிகம் இருக்கிறது. இதுதான் பெரிய இயக்குநர்களாக இருந்தாலும் தனுஷோடு சேர்ந்து செய்யும்போது அவர்கள் தங்கள் ஒரிஜினாலிட்டியை இழக்கிறார்கள். தனுஷ் தனது இயக்குநர் அறிவு என்பது மக்களோடு தொடர்பற்று இருப்பதை உணர்ந்து தனது நடிப்பு வேலையை மட்டும் பார்த்தால் இந்த நிலை மாறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Click it and Unblock the Notifications
