பென்ஸ் கார் ஆடம்பர கம்யூனிஸ்ட்! நான் பேசட்டுமா? சு.வெங்கடேசனுக்கு நீதிபதி GR சுவாமிநாதன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபிஎம் சு வெங்கடேசன் ஆடம்பர கம்யூனிஸ்டாக உள்ளார்.. நான் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து செல்லும்போது உயர் ரக கார், ஆடம்பர உடையில் ஒருவர் வந்தார்.. யாரோ என நினைத்த போது, அது கம்யூனிஸ்ட் கட்சி சு வெங்கடேசன்தான் என்று தெரிந்துகொண்டேன்.. என்று நீதிபதி சுவாமிநாதன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கில்தான் இந்த மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நூலக விவகாரம் காரணமாக.. நீதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபடும் அளவுக்குப் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Justice GR Swaminathan

வழக்கின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் அகல்விளக்கு உள்ளிட்ட சில பதிப்பகங்கள் போலி எழுத்தாளர்கள் பெயரில் புத்தகங்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரமற்ற புத்தகங்களை அச்சிட்டு அரசுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாகத் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

சர்ச்சையைத் தொடங்கி வைத்த நீதிபதியின் பேச்சு

இந்நிலையில், கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் பி.சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது நூலகப் புத்தக முறைகேடு குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், போலியான புத்தகங்களை வாங்கிச் செய்த பாவங்கள் கழிய வேண்டுமென்றால், அந்தப் புத்தக அலமாரிகளில் மகா பெரியவரின் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சு.வெங்கடேசன் எம்பி பதிலடி

நீதிபதியின் இந்தப் பேச்சுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கோபமாக பதிவிட்ட அவர், நூலகக் கொள்முதலில் ஊழல் நடந்திருந்தால், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.. அதுதான் நீதியரசர்களின் வேலை. ஆனால், நடந்தது பாவம் என்றும், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்றும் கூறுவது ஜோதிடர்களின் வேலை, என நீதிபதியைச் சாடியிருந்தார்.

நீதிமன்றத்தில் நீதிபதி சுவாமிநாதன் கொடுத்த பதிலடி

இதற்குத்தான் தற்போது நீதிபதி பதிலடி கொடுத்துள்ளார்.

நூலகப் புத்தகக் கொள்முதல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது.

அந்த நேரத்தில் சு.வெங்கடேசன் எம்பியின் விமர்சனத்திற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளிப்படையாகப் பதிலடி கொடுத்தார். நீதிபதி கூறுகையில், கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நான் நகைச்சுவையாகச் சொன்ன கருத்துக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் மாற்றுக் கருத்து சொல்லியிருக்கிறார். நான் எப்படிப் பேச வேண்டும் என்று அவர் எனக்கு அறிவுரை கூறுகிறார். நான் எல்லாம் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, உயர்ரக ஆடை அணிந்து ஒருவர் வந்ததைப் பார்த்தேன். யாரோ பெரிய கார்ப்பரேட் கம்பெனி முதலாளி வருகிறார் என்று நினைத்தேன்.

ஆனால் அது கார்ப்பரேட் ஆள் கிடைத்தது. கம்யூனிட்ஸ். உற்றுப் பார்த்தபோதுதான் அது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் என்பது தெரிந்தது. அவர் விலை உயர்ந்த பென்ஸ் காரில் வந்திறங்கினார்.. காலில் ரீபாக் ஷூ அணிந்திருந்தார்.

ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கு இவ்வளவு ஆடம்பர வசதி எப்படி வந்தது? புத்தகங்கள் எழுதி அதன் மூலம் கிடைக்கும் ராயல்டி பணத்தால் மட்டும் இந்த ஆடம்பர வாழ்க்கை வந்திருக்க வாய்ப்பில்லை என்று நான் பேசலாமா?, என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார். அவரின் இந்த விமர்சனம் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது,

அரசு நூலகப் புத்தக ஊழல் வழக்கில் தொடங்கிய இந்த விவகாரம், இப்போது நீதிபதிக்கும் எம்பிக்கும் இடையிலான தனிப்பட்ட விமர்சன மோதலாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+