திமுக செய்த அதே தப்பு.. தவெகவும் செய்வது நல்லதுக்கில்ல! பெரிய பிரச்சினையாயிடும்! அண்ணாமலை வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை," கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.

Annamalai

அண்ணாமலை

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.

திருப்பரங்குன்றம்

அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.

வழிபாட்டு உரிமை

காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து தீர்ப்பு மாற்றப்பட்டிருந்தால் அது வேறு விவகாரம்.

பகைமை உணர்வு

ஆனால், தொடர்ந்து இந்தப் பிரச்சினையைச் சர்ச்சைக்குரியதாக வைத்திருப்பதன் மூலம் இரண்டு மதத்தினரிடையே தேவையற்ற பகைமை உணர்வை அரசே வளர்க்கிறது. தீபத் திருநாளன்று தீபம் ஏற்றப்பட்டிருந்தால் முருக பக்தர்கள் வழிபட்டுவிட்டுச் சென்றிருப்பார்கள். இஸ்லாமியர்களும் தங்களது பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பார்கள். ஆனால், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதால் காவல்துறையினருக்குக் கூடுதல் மன அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படுகிறது.

தமிழக அரசு

எனவே, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி மனுதாரர்கள் கோரிய எண்ணிக்கையில் 20, 30 அல்லது 50 பேருக்கு அனுமதி வழங்கி தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளையும் புதுப்புது வரலாற்று விளக்கங்களையும் கூறி மக்களைக் குழப்ப வேண்டாம். திமுக செய்த அதே தவறை தமிழக வெற்றிக் கழகமும் தொடர்ந்து செய்வது ஏற்புடையதல்ல.

செஞ்சி சிறுமி

செஞ்சி பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போய் 35 நாட்களைக் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது. இந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்.பி., டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிறுமியை மீட்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிபிஐ விசாரணை

குழந்தைகள் தினத்தன்று முதலமைச்சர் குழந்தைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும், குழந்தைகளுடன் கொண்டாடுவதும் நல்ல விஷயம்தான். அதே நேரத்தில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முதன்மையான கடமை. 35 நாட்களாகியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தமிழகத்தின் சிறந்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்தும் முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்" என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+