கிறிஸ்தவத்துக்கு மாறியவர்களை BC ல் இருந்து நீக்கணும்.. டிஎன்பிஎஸ்சிக்கு எதிரான வழக்கில் சரமாரி வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை பிற்பட்டோர் பிரிவில் இருந்து நீக்கும்வரை டி.என்.பி.எஸ்.சி. பணி நியமனத்துக்கு தடை கோரிய வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தெற்குத்தெருவை சேர்ந்த கோமஸ்வரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டத்தின்படி கிறிஸ்தவ நாடார், கிறிஸ்தவ கிராமணி, மீனவர், பர்வதராஜகுலம், பட்டினவர் மற்றும் செம்படவர் ஆகிய பிரிவுகளில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் பட்டியலில் இருந்தும் நீக்குமாறு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.

Christianity

இட ஒதுக்கீடு அடித்தளத்தையே அசைத்துப்பார்க்கும் வழக்கு

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் ஏற்கனவே விசாரித்தபோது, தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட கோட்பாடுகளின் அடித்தளத்தையே அசைத்துப்பார்க்கும் வகையிலான மிக முக்கியமான அரசியலமைப்பு சிக்கல்களை எழுப்புகிறது.

இடஒதுக்கீட்டின் நோக்கமே சிதையும்

அத்துடன் இந்திய அரசியலமைப்பின் 16 (4)-வது பிரிவின்படி, சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை உறுதிப்படுத்த எந்தவொரு முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பல்வேறு கிறிஸ்தவ பிரிவினரும், மதம் மாறியவர்களும், உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும், இது அரசியலமைப்பிற்கு முரணாக இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கிறது என்றும் இந்த கோர்ட்டில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம், ஆழ்ந்த அரசியலமைப்புச் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான ஒரு வழக்காகும் என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

டிஎன்பிஎஸ்சி பணிநியமனத்துக்கு எதிரான வழக்கு

இந்தநிலையில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மேற்கண்ட சமுதாயத்தினரை நீக்கும் வரை இடஒதுக்கீட்டின்படி டி.என்.பி.எஸ்.சி பணி நியமனங்களை தடை செய்து உத்தரவிட வேண்டும் என மனுதாரர் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு வாதம்

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடும் போது, தமிழகத்தில் மதம் மாறியவர்களுக்கு உரிய சட்டமுறைப்படி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது, இவை உரிய சட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றியே அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கான உரிமைகளின்படியும் வழங்கப்படுகிறது. இந்த விவகாரத்தை பொறுத்த வரை மனுதாரர் இந்த நீதிமன்றத்தை திசை திருப்பும் வகையில் வழக்கை தொடர்ந்து உள்ளார். கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான சலுகைகளை பெறுவதில் எந்தவித சட்டவிதி மீறலும் இல்லை. இந்த வழக்கில் அரசு சார்பிலான கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று, இவ்வாறு வாதிட்டனர்.

சலுகை தர முடியாது

பின்னர் மனுதாரர் வக்கீல் வாதிடும் போது, "இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் ஏற்கனவே இந்து சாதியை பின்பற்றி சலுகைகளை பெறவே முடியாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் எந்த ஆய்வும் நடத்தாமல் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருவது சட்டவிரோதம்" இவ்வாறு கூறினார்.

நீதிபதிகள் உத்தரவு

அனைத்து தரப்பு கருத்துகளையும் பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் அடுத்த விசாரணையின்போது இறுதி முடிவை எட்டுவது அவசியம். எனவே அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+