காணாமல் போன புருஷன்.. கிழவனோடு தகாத உறவு.. இணையத்தை கலக்கும் சாயாவனம் படம் ரிவ்யூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தியேட்டரில் "சாயாவனம்" படம் ரிலீஸ் ஆனபோது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போ ஓடிடியில் பார்த்தவர்கள் மட்டும் படத்தை பற்றி சோசியல் மீடியாவில் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும் போது அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது? என கேட்க வைக்கிறது. சரி இந்த படத்தில் கதை பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்த படத்தின் கதையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இது வெறும் காதல் கதையோ, வழக்கமான ஆபாசத்தை நம்பிய படமோ கிடையாது. ஒரு பெண் எதிர்கொள்ளும் ஆபத்தையும், அதிலிருந்து அவள் மீள போராடுவதையும் மையமாக வைத்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் தியேட்டரில் வெளியான போது பெரிய அளவில் இந்த படம் கவனத்தை பெறவில்லை. ஆனால் நவம்பர் 11ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியான பிறகு சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. படத்தை பார்த்தவர்கள் அதன் கதைகளும் பெண் கதாபாத்திரத்தின் போராட்டம், நடிகர்களின் நடிப்பு என பல விஷயங்களை பாராட்டி வருகின்றனர்.

Saayavanam

சாயாவனம் படத்தின் கதை

இந்த படத்தின் கதை என்னவென்றால் லாரி ஓட்டுனரான முத்து (சௌந்தர்ராஜன்) தனது காதலியான சீதாவை (தேவானந்தா) திருமணம் செய்து கொண்டு மெகாலாயாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் வசிக்கும் தன்னுடைய பாட்டி அற்புதம் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்பது முத்துவின் நீண்ட நாள் கனவு அதற்காக பணத்துடன் வெளியே செல்லும் அவர் மனைவியை தனது பாட்டியின் பாதுகாப்பில் விட்டு செல்கிறார்.

ஆனால் முத்து சென்ற பிறகு ஒரு மாதமோ.. 2 மாதமோ இல்ல.. 3 வருடங்களாகியும் திரும்பி வரவில்லை. கணவன் எப்போ வருவார் என்ற ஏக்கத்துடன் சீதா வாசலிலே காத்திருக்கிறார். அந்த தனிமையான வாழ்க்கைக்குள் அடுத்தடுத்து சில ஆண்கள் நுழையும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. அந்த பகுதியில் வனத்துறை அதிகாரியாக ரேஞ்சர்க்கு சீதா மீது தவறான எண்ணம் வருகிறது. இன்னொரு பக்கம் முத்துவிடம் பணத்தை இழந்த சுருளி என்பவர் பணத்தை தேடி அங்கு வருகிறார்.

Saayavanam

அப்போது சுருளியின் பாட்டி அப்புத்தம்மாள் மருத்துவச்சி என்பதை தெரிந்து கொண்டு, பாம்பு கடித்து விட்டதாக சொல்லி அவர் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அவரது பார்வையும் சீதா மீது திரும்புகிறது. ஒரு கட்டத்தில் புருஷனும் இல்ல, வெளி உலக தொடர்பும் இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதி.. இப்படி சூழலில் சீதாவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்கள், அவர்களிடம் இருந்து அவள் தப்பிக்க என்ன செய்கிறாள்? என்பதுதான் படத்தின் சுவாரசியமான பகுதி. அதிலும் ஒரு கட்டத்தில் வில்லன் சுரளியுடன் சீதா தகாத உறவு வைத்துக் கொள்கிறார். பிறகு அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது டுவிஸ்ட்.

இங்கேதான் படத்தின் கதைகளம் நம்மை கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்பதற்காக, அவளை பலவீனமாக நினைக்கும் மனிதர்களின் மனநிலையும், அவர்களின் ஆசையும், பேராசையும், அவளுக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளையும் படம் பேசுகிறது. சீதா எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்? 3 வருடங்களாக வராத முத்து எங்கே போனார்? அவர் திரும்பி வருவாரா? என்ற கேள்விகளுடன் கதை நகர்கிறது.

படத்தின் பிளஸ்

சீதாவாக நடித்துள்ள தேவனந்தாவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. தனிமை, பயம், ஏக்கம், கோபம், மோகம் என அந்தந்த கதாபாத்திரம் எதிர்கொள்ளும் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தி இருக்கும் இடம் படத்திற்க்கு பலம் சேர்க்கிறது. சௌந்தர்ராஜன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் சந்தோஷ் தாமோதரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் அனில் முதல் முறையாக தமிழில் இயக்கி உள்ள எந்த படத்தில் காதல், தனிமை, காமம், பேராசை, பெண் கொடுமை, தற்காப்பு என பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கிறது.

ஓடிடியில் பாராட்டு

1000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பங்கேற்ற கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களில் ஒன்றாகவும் சாயாவனம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் இந்த படத்தை பார்த்தவர்கள் பகிரும் கருத்துக்களை பார்த்தால் சாயாவனம் படத்தின் மீது இப்போது புதியதாக ஒரு கவனம் உருவாகி இருக்கிறது. பொதுவாக சில படங்கள் தியேட்டரில் ஆஹா ஓகோ என்று பாராட்டப்படும். ஆனால் ஓடிடிக்கு வந்த பிறகு கழுவி ஊத்தி ட்ரோல் செய்யப்படும். ஆனால் சில படங்கள் அபூர்வமாக தியேட்டரில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், ஓடிடிக்கி வந்த பிறகு ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்த மாதிரி ஒரு படம் தான் இந்த சாயாவனம்.

இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாது. காரணம் அளவுக்கு அதிகமான கவர்ச்சியும், ஆபாசமும் அங்கே இங்கே இருக்கிறது. தனியாக இந்த வீக்கண்டை கழிப்பவர்கள் பார்க்கலாம். தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ ஒரு மாதிரியான படம் என்று நினைத்து விடாதீர்கள். காட்டுக்குள் நடக்கும் கதைக்கு பின்னால் ஒரு பெண்ணின் போராட்டமும் இருக்கிறது. வழக்கமான காதல், காமெடி, ஆக்சன் படங்களை பார்த்து அலுத்து போய் இருந்தால் இந்த படத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+