கணவரின் கள்ளக்காதலி.. காட்டி தந்த ஜிபிஎஸ்.. எதிர் வீட்டுக்காரருடன் மனைவி போட்ட 12 லட்சம் அக்ரிமெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவருடன் பழகிய பெண்ணை கொலை செய்ய மனைவியே ரூ.13 லட்சம் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இந்த சம்பவத்தில் மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தில், காரின் ஜிபிஎஸ் மிக முக்கிய திருப்பத்தை தந்துள்ளது.

புனே விமான நிலையத்திலுள்ள ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் வர்ஷா துர்கர். இவர் ஏர்போர்ட்டுக்கு பக்கத்திலேயே தனோரி பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Varsha Turkar Murder

வர்ஷா - நிதேஷ்

வர்ஷாவுக்கும் கோண்டியாவை சேர்ந்த நிதேஷ் அகர்வாலுக்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம் இருந்துள்ளது. 42 வயதான நிதேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், தீபாவளியை கொண்டாடுவதற்காக தனது மகளுடன் வர்ஷா மத்திய பிரதேசத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நிதேஷை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.. கடந்த நவம்பர் 14ம் தேதி வர்ஷா, நிதேஷை சந்திக்க சென்றுள்ளார். பலாகாட் பகுதியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள கோண்டியா மாவட்டம் பந்த்ரானிக்கு இருவரும் காரில் சென்றுள்ளனர்.

அங்கு வயங்கங்கா நதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் சுற்றியுள்ளனர். அப்போது அங்கிருந்த சிவன் கோவில் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அந்த நேரத்தில் பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்துள்ளனர்.. அவர்கள் திடீரென வர்ஷாவை கத்தியால் பலமுறை குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வர்ஷா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கண்ணெதிரே வர்ஷா கொலை செய்யப்படுவதை கண்டு நிதேஷ் அதிர்ச்சியில் அலறினார்.. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

போலீசாருக்கு கிடைத்த துப்பு

முதலில் இது நகைக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனால் வர்ஷா அணிந்திருந்த தங்க நகைகள் எதுவும் திருடப்படவில்லை. இதனால் வேறு ஏதோ காரணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர்.

கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். பந்த்ரானி, திரோடா, கைர்லாஞ்சி, வராஷிவ்னி, கோண்டியா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 4 நாட்களாக இந்த வேலையே நடந்துள்ளது. அப்போது நிதேஷின் காரை ஒரு பைக்கில் வந்த 3 பேர் பின்தொடர்ந்து சென்றது தெரியவந்தது.

அத்துடன் செல்போன் அழைப்பு விவரங்கள், யார் யாருடன் பேசினார்கள், காரின் பயணம் எந்தெந்த இடங்களுக்கு இருந்தது என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர்.. இறுதியில் இம்ரான் கரீம் ஷேக் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 26 வயதான இம்ரான் ஏற்கெனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

இவரிடம் நடத்திய விசாரணையில்தான், நிதேஷ் மனைவி மோனா பெயர் அடிபட்டது.. அதுமட்டுமல்ல இந்த கொலைக்கான திட்டம் பற்றிய தகவல்களையும் போலீசாரிடம் இம்ரான் புட்டு புட்டு வைத்து விட்டார்.

ஏன் இந்த கொலை?

அதாவது, நிதேஷின் மனைவி மோனா அகர்வாலுக்கு 41 வயதாகிறது.. மோனாவுக்கு தனது கணவர் வர்ஷாவுடன் பழகுவது பிடிக்கவில்லை. இவர்கள் 2 பேருமே நெருக்கமாக இருப்பதால், கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்றும் மோனா பயந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் வர்ஷாவை கொல்லவும் முடிவெடுத்தார்.

இதற்காக தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் குணால் கும்பல்கரை மோனா தொடர்பு கொண்டுள்ளார். 31 வயதான குணால் ஒரு தொழிலதிபர். அவரிடம் வர்ஷாவை கொலை செய்ய வேண்டும் என்று மோனா சொல்லவும், குணால் உடனே தனக்கு தெரிந்த ஷாருக் கான் பதானை அணுகியுள்ளார். 33 வயதான ஷாருக்கிடம் ரூ.13 லட்சம் கொடுத்து வர்ஷாவை கொலை செய்ய மோனா அக்ரிமெண்ட் போட்டுள்ளார்.

காட்டித் தந்த ஜிபிஎஸ்

இந்த கொலையால் போலீசில் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக பக்கா பிளானை மோனா போட்டுள்ளார்.. இதற்காக நிதேஷ் பயன்படுத்திய காரையே குற்றவாளிகளுக்கு தந்து கொலைக்கு பயன்படுத்தி கொள்ள சொன்னார்.. அந்த கார் மோனா பெயரில் வாங்கப்பட்டிருந்தது. அதில் Toyota i-Connect என்ற GPS வசதி இருந்துள்ளது.

இந்த காரின் ஜிபிஎஸ் செயலியின் ஐடி, பாஸ்வேர்டு விவரங்கள் மோனாவிடம் இருந்துள்ளன. அதை பயன்படுத்தி காரின் இருப்பிடத்தை கண்காணிக்க முடியும். இந்த விவரங்களை கொலையாளிகளிடம் கொடுத்து, நிதேஷின் கார் எங்கே செல்கிறது என்பதை கண்காணிக்க, மோனா உதவியிருக்கிறார்.

மோனா போட்ட அக்ரிமெண்ட்

மோனா சொன்னபடியே, நிதேஷும் வர்ஷாவும் காரில் சென்றபோது அவர்களை கொலையாளிகள் பின்தொடர்ந்துள்ளனர். கார் வனப்பகுதியில் நின்றதும் அந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளனர். பிறகு பைக்கில் வந்த 3 பேர் வர்ஷாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.. இவ்வளவும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கில் மோனா அகர்வால், குணால் கும்பல்கர், ஷாருக் பதான், இம்ரான் கரீம் ஷேக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெய்லன் ஷேக், கிரிஷ் ராவுத் ஆகிய 2 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கணவரின் கள்ளத்தொடர்பை முறியடிக்க, ஒரு கொலையை செய்து, அதற்காக ரூ.13 லட்சத்துக்கு மனைவி போட்ட அக்ரிமெண்ட்தான், இணையத்தை உலுக்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+