பேன்ட் ஜிப் கழற்றியபடி பெண்ணிடம் ஏடாகுடமாக பிரச்சனை செய்த தவெக நகர செயலாளர்.. கணவர் பகீர் புகார்
கோவை: கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். கோவையில் தவெக நிர்வாகி ஒருவர் கட்சி பொறுப்பு வாங்கி தருவதாக சொல்லி பணம் வாங்கியதுடன், கடைக்குள் புகுந்து பெண்ணை மிரட்டினார். அவர் மீது பல அதிர்ச்சி புகார் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கலிங்கநாயக்கன்பாளையம் பகுதி உள்ளளது. தவெகவை சேர்ந்த மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுது நீக்கும் ஷோரூம் வைத்துள்ளார். அவருக்கு தவெகவின் நகரச் செயலாளர் பிரகாஷ் என்பவரிடம் பழகியுள்ளார். தவெகவில் இளைஞரணிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ரூ. 1 லட்சம் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளார்.

கட்சி பதவிக்கு 1 லட்சம் பணம்
பணத்தை கேட்டதற்காக அவரின் ஷோரூமில் மகாராஜன் இல்லாத நேரத்தில் நுழைந்த பிரகாஷ், அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதுதொடர்பாக வீடியோ வெளியானது. இதுகுறித்து மகாராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தவெகவில் 8 மாதங்களாக இருக்கிறேன். என்கிட்ட கட்சி பதவிக்காக ஒரு லட்சம் பணம் கேட்டார். நானும் பணம் கொடுத்தேன். ஒன்று பதவி கொடுங்கள் இல்லை பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டேன். 3 மாதங்களாக பிரகாஷ் எந்த பதிலும் சொல்லவில்லை.
நடவடிக்கை இல்லை
மேலும் ரூ.50,000 கொடுங்கள் பதவி போட்டு தருகிறேன் என்கிறார். எனக்கு வசதியில்லை. பணத்தை கொடுங்கள் என கேட்டேன். அதற்கு தான் பிரச்சனை செய்கிறார்கள். இதுகுறித்து பொறுப்பு அமைச்சரிடம் புகார் கூறினேன். அவரும் நடவடிக்கை எடுக்க சொன்னார். இந்த மாதிரி ஆட்களை கட்சியில் இருக்க கூடாது என எச்சரித்தார். ஆனால் இப்போது வரை நடவடிக்கை இல்லை. நீ ஏன் பணம் கொடுத்தாய். எங்களை கேட்டு கொடுத்தீர்களா என மாவட்ட செயலாளர் ராஜ்குமார் எச்சரிக்கிறார். ஒருமையில் பேசுகிறார்.
பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்னை இவ்வளவு கேட்பவர்கள், பிரகாஷை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். எங்களை கேட்டு பணம் கொடுக்கவில்லை. நாங்கள் எதுவும் செய்ய முடியாது என சொல்கிறார்கள். எங்கள் ஷோரூமில் இருந்து ஒரு ஆக்டிவா பைக் எடுத்துள்ளார். அதற்கும் பணம் கொடுக்கவில்லை. நான் பெரிய பணக்காரன் இல்லை. என் அப்பா கோடிஷ்வரன் இல்லை. என்னை மாதிரி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர் காது கொடுத்தே கேட்கவில்லை. என் அருகிலேயே பிரகாஷ் இருக்கிறார்.
மிரட்டுகிறார்
அவரிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கடையில் இல்லை என தெரிந்து உள்ளே வந்துள்ளார். பெண்கள் இருக்கும்போது ஜிப் போடாமல் வந்து மிரட்டுகிறார். அவர்கள் வீட்டில் பெண்கள் இல்லையா. கூட ஆட்களை அழைத்து வந்து பிரச்சனை செய்கிறார்கள். தவெகவை காட்டி கொடுப்பது நோக்கமில்லை. இதுபோல தவறு செய்வோரை கட்சியை விட்டு தூக்கினால் தான் பயப்படுவார்கள். இல்லையென்றால் கட்சி பெயர் கட்டு போகும்" என்றார்.


Click it and Unblock the Notifications
