கஞ்சா, மது போதையில் மனைவியை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற கணவர்! கரூரில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீஸார் தேடி வருகிறார்கள். கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானதால் தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காளையன் என்கிற பாலசுப்ரமணியம் (45), இவரது மனைவி மலர் (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். திருப்பூர் தட்டான் தோட்டம் முதல் வீதி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.

karur crime news

பாலசுப்பிரமணியம் திருப்பூர் பூ மார்க்கெட்டில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கமும், கஞ்சா போன்ற போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக பாலசுப்ரமணியத்தின் மனைவி மலர் கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு, உறவினர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார். இதன் பின்னர் தான் திருந்தி விட்டதாகவும் இனிமேல் போதைப் பொருள் மற்றும் குடியை தொடுவதில்லை என்றும் சத்தியம் செய்த பாலசுப்ரமணியம், சமாதானம் செய்து மனைவியை அழைத்து வந்து மீண்டும் குடும்பம் நடத்தியுள்ளார்.

இருந்த போதிலும் மீண்டும் கடந்த சில மாதங்களாக குடி மற்றும் போதைக்கு பாலசுப்ரமணியம் அடிமையாகி உள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே மீண்டும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் வேலை முடிந்து குடிபோதையில் வந்த பாலசுப்ரமணியம் மனைவி மலருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி மனைவியின் தாய், அதாவது மாமியாருடன் சண்டையிட்டு அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணியம் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தனது மனைவி மலரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் நிலைகுலைந்து கீழே சரிந்த மலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான பாலசுப்ரமணியம் உடனடியாக அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உயிரிழந்த மலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த, திருப்பூர் மாநகர தெற்கு காவல் துறை ஆணையர் ஆகாஷ் ஜோஷி தடயங்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலசுப்ரமணியத்தை தேடி வருகின்றனர்.

குடிபோதையில் கணவன் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சம்பவம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஒரு சம்பவத்தில் கணவன் மது அருந்த மனைவி பணம் தரவில்லை என்ற ஆத்திரத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவர், தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதில் அந்த குடும்பமே உடல் கருகி உயிரிழந்தது.

கோவை சம்பவம்

கோவையில் நடந்த ஒரு சம்பவத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தனது செலவுக்கு பணம் தராத தாயை உருட்டுக் கட்டையால் தாக்கி படுகொலை செய்தார். இதை தடுக்க வந்த தனது தம்பியையும் அவரது தாக்கியிருந்தார்.

நெல்லையிலும்..

அதே போல் நெல்லையில் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவர், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி, இரு குழந்தைகள் மீது அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். இந்த கோர நிகழ்வில் மனைவியும் ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியானது. இப்படி குடும்பங்களில் நிகழும் வன்முறைகளுக்கு மது போதையும், கஞ்சா உள்ளிட்ட போதையும்தான் காரணம் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+