அன்று ஐசியூவில் வி.எஸ்.பாபு கையில் முத்தமிட்ட விஜய்! இன்று Babu-வின் உடலை தோளில் சுமந்து உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனையில் கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, ஐசியூவில் சிகிச்சை பெற்ற போது அவரது கையில் முத்தமிட்ட முதல்வர் விஜய், இன்று பாபுவின் உடலை தோளில் சுமந்து சென்ற சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் காலமானார். அவரது உடலுக்கு நேற்று மாலை முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது கண்ணாடி பெட்டியில் இருந்த பாபுவின் முகத்தை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தார். இதையடுத்து பாபுவின் குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

Vijay

பாபுவின் வீட்டிற்கு வந்த அமைச்சர்கள்

பெரம்பூரில் உள்ள பாபுவின் வீட்டிற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக நிர்வாகிகள், பாபுவின் ஆதரவாளர்கள், அவர் ஏற்கெனவே பயணித்திருந்த அதிமுக, திமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் வந்து மரியாதை செலுத்தினர்.

இறுதிச் சடங்குகள்

இதையடுத்து இன்றைய தினம் மாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் தொடங்கின. அப்போது வி.எஸ்.பாபுவின் உடலை முதல்வர் விஜய், அமைச்சர்களும் கால்களில் செருப்பு அணியாமல் தோளில் சுமந்து சென்றனர். அது போல் திருவிக நகர் இடுகாடு வரை முதல்வர் விஜய் நடந்தே சென்றார். இந்த சம்பவங்கள் பாபுவின் குடும்பத்தினரிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.

பட்ஜெட் கூட்டத் தொடர்

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதையடுத்து வீட்டிற்கு வந்த அவருக்கு நள்ளிரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவக் குழு கண்காணிப்பு

அங்கு அவருக்கு பல துறை மருத்துவக் குழுவினர் ஐசியூவில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிய தவெக அமைச்சர்கள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் இருந்தனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.

செப்டம்பர் 23 ஆம் தேதி விஜய் சந்திப்பு

இதையடுத்து அடுத்த நாள் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல்வர் விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவின் உடல்நிலையை கேட்டறிந்தார். அப்போது விஜய், ஐசியூவிற்கு சென்று பாபுவை பார்த்தார். "எப்படிண்ணா இருக்கீங்க" என கேட்டார்.

அண்ணா ஒன்னுமில்லை- விஜய் ஆறுதல்

மேலும் விஜய், "அண்ணா உங்களுக்கு ஒன்றுமில்லை. நான் டாக்டரிடம் எல்லாத்தையும் பேசிவிட்டேன். எதை பற்றியும் கவலைப்படாதீங்க. நீங்கள் கையை அசைச்சுக் காட்டி செய்த சைகைதான் நம்ம கட்சியோட டிரேட் மார்க் ஆகிடுச்சு .. சீக்கிரமா திரும்பி வந்து அதே ஸ்டைலில் கலக்கணும் " என கூறி கையில் முத்தமிட்டார். இதை பார்த்ததும் பாபுவின் குடும்பத்தினர் உருக்கமாகினர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அன்று பாபு கையில் முத்தமிட்ட விஜய், இன்று அவரது உடலை சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டதால் இறுதி ஊர்வலத்தில் பாபுவின் பிரிவை நினைத்து முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+