தனிஷ்க் நகை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 3 பைக்குகள்! 11 கிலோ நகைகளுடன் நிஷாந்த் தப்பிய வாகனம் எது?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையடிப்பதற்காக 3 இரு சக்கர வாகனங்களை நிஷாந்த் பயன்படுத்தியதாக கொள்ளையன் நிஷாந்த், போலீஸார் விசாரணையில் தெரிவித்திருந்தார். நிஷாந்தை எஸ்.எஸ்.நகர் போலீஸார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் இந்த தகவல்களை தெரிவித்திருந்தாராம்.

இதுகுறித்து எஸ்.எஸ்.நகர் போலீஸார் கூறிய தகவல்கள் என்னவெனில், " கொள்ளையடிப்பதற்காக நிஷாந்த் 3 பைக்குகளை பயன்படுத்தியிருந்தாராம். கடந்த 5ஆம் தேதி கொள்ளை முயற்சியின் போது மீனாட்சியின் தாயாரின் பைக்கை நிஷாந்த் கொண்டு வந்திருந்தாராம்.

madurai nishanth

அது போல் கொள்ளையடித்த 12 ஆம் தேதி இரவு சர்வேயர் காலனியில் ஒரு கடையில் வாடகைக்கு கொண்டு வந்த பைக்கில் வந்து கொள்ளையடித்து பின்னர் நகைகளை அந்த வாகனத்தில் வைத்து கொண்டுச் சென்றாராம். இதையடுத்து கொள்ளைக்கு பின் தனது சொந்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்திய நிலையில் அதை சேலத்தில் நிறுத்தியிருந்தாராம். இவ்வாறு போலீஸார் தெரிவித்திருந்தனர்.

மேலும் பெங்களூரில் நிஷாந்தை ஆம்னி பேருந்தில் ஏற்றியவர்களுக்கும் இந்த கொள்ளையில் தொடர்பிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.

நடந்தது என்ன?

மதுரை பைபாஸ் ரோடு தனிஷ்க் நகைக் கடையில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி சுமார் ரூ 15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பழங்காநத்தத்தைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ், நிஷாந்தின் தோழியும் இன்ஸ்டா பிரபலமுமான திருப்பாலை பார்க் டவுக் பகுதியை சேர்ந்த மீனாட்சி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர். இதையடுத்து மூன்று பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 நாட்கள் காவல்

இந்த நிலையில் நிஷாந்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்றைய தினம் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.

போலீஸ் வாதம்

போலீஸ் தரப்பில் வைத்த வாதத்தில் கூறியிருப்பதாவது: இது முக்கியமான கொள்ளை. நிஷாந்த் பல நாட்கள் திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளார். இவ்வளவு பெரிய கொள்ளையில் நிஷாந்த் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது. கொள்ளைக்கு பிறகு நிஷாந்த் தப்பிச் செல்ல சிலர் உதவி செய்துள்ளனர். எனவே நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிக்க மட்டுமே இந்த கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பிருக்கிறதா என்பது குறித்து நிஷாந்திடம் விசாரித்தால் மட்டுமே தெரியவரும் என வாதத்தில் தெரிவித்திருந்தனர்.

பயமாக இருக்கு- நிஷாந்த்

அப்போது நீதிபதி, நிஷாந்திடம், "போலீஸார் உங்களை காவலில் எடுத்து விசாரிக்க கேட்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்? என கேட்டார். அதற்கு நிஷாந்த், "கொள்ளையடித்த நகைகள் முழுவதையும் கொடுத்துவிட்டேன். 5 நாட்கள் காவல் வேண்டாம். பயமாக இருக்கிறது. ஒரு நாள் போதும், கொள்ளையில் என் தந்தை சுரேஷ், தோழி மீனாட்சி ஆகியோருக்கு தொடர்பில்லை" என்றார்.

நீதிபதி உத்தரவு

இதையடுத்து நீதிபதி, "நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. விசாரணையின்போது எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது. சட்டத்திற்கு உள்பட்டு விசாரணை நடத்த வேண்டும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

நிஷாந்த்

இதையடுத்து போலீஸார் நிஷாந்தை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்கள் வாகனத்தின் ஜன்னல் வழியாக மைக்கை நீட்டி "ஏதாவது சொல்கிறீர்களா" என கேட்டதற்கு நிஷாந்த், "மீனாட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை" என்றார். உடனே போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி தன் பக்கம் அணைத்துக் கொண்டனர்.இதையடுத்து அவர் ஒரு நாள் காவலுக்கு எஸ்.எஸ்.நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+