அகிலேஷ் + காங்கிரஸ்.. மோடியை வீழ்த்த இது போதுமா? உபி தேர்தல் சர்வே சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த சர்வேயில் பாஜக முன்னிலையில் இருந்தாலும் அகிலேஷ்- காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட கணிசமான சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது. இது உபி தேர்தல் குறித்து நமக்கு எதை உணர்த்துகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேசத்தில் 2027ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே தேர்தல் நடத்தப்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்துக்கணிப்பு குறித்த முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. 'Whispers In The Corridors' என்ற தளம் இந்த ஆன்லைன் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

Uttar Pradesh Election Narendra Modi Yogi

உத்தர பிரதேச தேர்தல் சர்வே

உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டணி தெளிவாகிவிட்ட நிலையில், இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்பதே பிரதான கேள்வியாக இருந்தது. கசந்த வாரம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவுகளில் பாஜகவுக்கே மிக பெரிய முன்னிலை இருக்கிறது. இருப்பினும், இதே டிரெண்ட் தொடருமா என்பது மிக பெரிய கேள்வி.!

இந்த கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு 29% பேரும், காங்கிரஸுக்கு 8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 55.91% பேர் பாஜகவுக்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு கடந்த 10 ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள நிலையில், அவருக்கு பாசிட்டிவாகவே இந்த சர்வே முடிவுகள் அமைந்துள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு 29.03% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பகுஜுன் சமாஜ்

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருந்தது. ஆனால், இந்த ஆன்லைன் சர்வேயில் அக்கட்சிக்கு 8.60% பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி மிகவும் மோசான நிலையில் இருக்கிறது. ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த பகுஜுன் சமாஜ் இப்போது மிக மோசமான நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

இந்த கருத்துக்கணிப்பில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், காங்கிரஸை விட சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அது லோக்சபா தேர்தல். மேலும், அந்த தேர்தலிலும் சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தது. எனவே, அது காங்கிரஸின் தனி பலமாக கருத முடியாது.

மேலும், நாம் இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது இப்போது நடத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கருத்துக்கணிப்பு மட்டுமே. எனவே, இதை மட்டுமே ஒட்டுமொத்த உத்தர பிரதேச வாக்காளர்களின் மனநிலையாகக் கருத முடியாது. மேலும், 2027 தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள், கூட்டணிகள் மற்றும் தொகுதி பங்கீடுகள் தேர்தல் களத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

கடந்த கால தேர்தல்

கடந்த 2022ம் ஆண்டு 403 இடங்களை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக 255 இடங்களை வென்றது. அதன் கூட்டணி மொத்தம் 273 இடங்களையும் வென்றது. மறுபுறம் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களையும் அதன் கூட்டணி 125 இடங்களையும் வென்றது. பகுஜன் சமாஜ் 1 இடத்தையும் காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றின.

2024ல் 80 இடங்களை கொண்ட லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றது. அதாவது இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. அதே சமயம் பாஜக 33 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் தளம் 2 இடங்களையும், அப்னா தளம் (சோனேலால்) 1 இடத்தையும் பெற்றது. அதாவது என்டிஏ கூட்டணி 36 இடங்களை மட்டுமே வென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+