இந்தியாவின் 4 ரபேல் விமானங்கள் மாயம்? பிரிட்டன் இதழ் வெளியிட்ட தகவல்! மறுக்கும் மாஜி மார்ஷல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய விமானப்படையிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் இருக்கும் நிலையில், அவற்றில் 32 மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாக பிரிட்டிஷ் விமான போக்குவரத்து இதழ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த தகவலை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது விமானப்படையின் துணை தளபதியாக பணியாற்றிய ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இந்திய விமானப்படையை பலப்படுத்த பிரான்ஸிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் விமானங்களை வாங்கியுள்ளது. கடந்தாண்டு பாகிஸ்தான் உடன் நடந்த ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்த ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு மிக பெரியளவில் கை கொடுத்தது.

India Rafale Fleet India Rafale

ஃபிளைட் குளோபல்

இதற்கிடையே பிரிட்டன் நாட்டை சேர்ந்த சர்வதேச இதழான ஃபிளைட் குளோபல் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது பிரான்ஸிடம் இருந்து நாம் 36 ரபேல் விமானங்களை வாங்கியிருந்தோம். ஆனால், அதில் 32 ரபேல் விமானங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 4 விமானங்களுக்கு என்ன ஆனது.. இதற்கான ஆதாரம் என்ன உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் அது பகிரவில்லை.

மறுப்பு

இந்த தகவலுக்கு ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூரின் போது பணியாற்றி ஓய்வு பெற்ற நர்மதேஷ்வர் திராவி, இந்த ரிப்போர்ட் குறித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அவர் மேலும், "கடந்த ஆண்டு பாகிஸ்தானுடனான மோதலின்போது இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்போதே தகவல் பரவின. ஆனால், அதே விமானங்கள் பின்னர் சர்வதேசப் பயிற்சிகள் பங்கேற்றன" என்றார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் உடனான மோதலின் போது பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன. இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமானி ஸ்குவாட்ரன் லீடர் சிவாங்கி சிங் பாகிஸ்தானிடம் பிடிபட்டதாகவும், அவர் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் பாகிஸ்தானில் இருந்து பொய்யான தகவல்களை பரப்பின. ஆனால், பின்னர் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சிவாங்கி சிங் சிரித்தபடி போட்டோ எடுத்துக்கொண்டது அந்தப் பொய்களை அம்பலப்படுத்தியது.

பிளாட் குளோபல் நிறுவனமும் பிரேசிலை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான எம்பிரேயர் இணைந்து இந்த ரிப்போர்ட்டை வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவிடம் உள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 32 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் DH என்பது இரட்டை இருக்கைகள் கொண்ட ரபேல் விமானங்களையும், EH என்பது ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களையும் குறிக்கிறது. அதேநேரம் இந்த ரிப்போர்ட்டில் உள்ள தகவல்களில் தவறுகள் இருக்கலாம் என்றும் அதற்கு சட்டப்பூர்வ பொறுப்பேற்க முடியாது என்பதையும் பிளைட் குளோபல் கூறியிருக்கிறது.

பின்னணி

கடந்த 2025 மே 7ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. இந்த ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது முதலில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவே இந்தியா தரமான பதிலடியை கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மே 10ஆம் தேதி பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரியது. இந்தியாவும் அதை ஏற்க மேற்கொண்டு தாக்குதலை நடத்தாமல் விட்டதால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+