விவசாயிகள் நலனைவிட.. கூட்டணி அரசியல்தான் விஜய்க்கு முக்கியமா? அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் கர்நாடக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்குச் சேர வேண்டிய நீரைப் பெற்றுத்தர முயற்சிக்காமல், விஜய் அரசு அவசரகதியில் உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன் என்று அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 23ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறக்க உத்தரவிட்ட போதும், கர்நாடகா அதனை செயல்படுத்தவில்லை. இதனால் காவிரியில் இருந்து கர்நாடகா தர வேண்டிய மீதமுள்ள தண்ணீரை திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.

Cauvery water

அதுமட்டுமல்லாமல் காவிரி விவகாரத்தில் எத்தனை மனுக்கள் வந்தாலும், தற்போது அதனை தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று தெரிவித்தனர். இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மறுபக்கம் விவசாயிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக அதிமுக எம்பி இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் கர்நாடக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்குச் சேர வேண்டிய நீரைப் பெற்றுத்தர முயற்சிக்காமல், விஜய் அரசு அவசரகதியில் உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்?

ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் கடுமையான சட்டப் போராட்டங்களின் மூலம் பெற்றுத்தந்த காவிரி உரிமையைப் பாழாக்குவது ஏன்? தற்போது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு யார் பொறுப்பு?கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில், அவரது புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

டெல்லி வரை செல்ல முடிந்த முதல்வர் விஜய்க்கு, தமிழக அமைச்சர்கள் குழுவுடன் சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, தமிழகத்தின் உரிமையை வலியுறுத்த நேரமில்லாமல் போனது எப்படி? தமிழக விவசாயிகளின் நலனைவிட கூட்டணி அரசியல்தான் உங்களுக்கு முக்கியமா? என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+