மகளிர் உரிமைத்தொகையை கொடுக்க மறுத்த பாட்டி.. மலையில் வைத்து பேரன் கொடுத்த தண்டனை! உயிரே போச்சி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில் வழங்கப்படும் பணத்தை தரவில்லை என்று கூறி தனது 78 வயது பாட்டியை மலைக்கு அழைத்து சென்று கொடூரமாக கொன்று நாடகமாடிய 20 வயது பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாணையில் கொலை பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

20-year-old-arrested-for-murdering-grand-motherover-gruhalaksmi-scheme-money-in-belagavi

தமிழகத்தில் திருமணமான தகுதியான பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மாதந்தோ ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 'கிருஹலட்சுமி' திட்டத்தின் வழியாக திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகா அரலிகட்டி கிராமத்தை சேர்ந்த ஹம்மவ்வா (வயது 78) பயன்பெற்று வருகிறார். இவருக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி திடீரென்று ஹம்மவ்வா மாயமானார். அருகே உள்ள பச்சாப்பூர் வார சந்தைக்கு சென்று வருவதாக வெளியே சென்ற ஹம்மவ்வா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

ஹம்மவ்வாவை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி கட்டபிரபா அணையின் நீர்த்தேக்கத்தில் ஹம்மவ்வாவின் உடல் கிடைத்தது. யாரோ அவரை கொன்று உடலை 2 சாக்குபைகளில் திணித்து அதில் கல்லை கட்டி அணை நீர்த்தேக்கத்தில் வீசியது தெரியவந்தது.

உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தது யார்? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். எமகனமரடி போலீசார் தனிப்படை அமைத்து துப்பு துலக்கினர். அப்போது தான் ஹம்மவ்வாவின் பேரனான 20 வயது நிரம்பிய பீமப்பா மீது சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அப்போது அவர் பாட்டி ஹம்மவ்வாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், 'ஹம்மவ்வாவிற்கு அரசு சார்பில் 'கிருஹலட்சுமி' திட்டத்தில் மாதம் ரூ.2000 கிடை்து வந்தது. இந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை தனக்கு வழங்க வேண்டும் என்று பேரன் பீமப்பா கேட்டு வந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது.

கடந்த 10ம் தேதி வார சந்தைக்கு சென்ற ஹம்மவ்வாவை, மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து கவி சித்தேஸ்வரா மலைக்கு அழைத்து சென்றனார். அங்கு வைத்து மகளிர் உரிமைத்தொகையை கேட்டார். ஹம்மவ்வா கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பீமப்பா கழுத்தை நெரித்து கொடூரமான கொன்றார். பிறகு கொலையை மறைக்க திட்டமிட்டார்.

உடலை மலையிலேயே விட்டு சென்றதோடு, பச்சாபூர் சந்தையில் 2 சாக்குப்பபை வாங்கினார். பாட்டி ஹம்மாவிடம் இருந்த ரூ.2,300 பணம், 2 தங்க சங்கிலியை எடுத்த பிறகு அவரது உடலை சாக்குப்பையில் போட்டார். பிறகு இரவில் மோட்டார் சைக்கிளில் அவரது உடலை வைத்து அணையின் நீர்த்தேக்கத்துக்குள் கல்லை கட்டி வீசினார். பிறகு கொலை செய்யாதது போல் நடித்து போலீசில் சிக்கினார்'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+