திருப்பத்தூரில் கார் பின்னாடியே வந்த கணவர்.. ஆண் நண்பருடன் மனைவிக்கு நேர்ந்த சோகம்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூரில் காரில் வைத்து ஆண், பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில் தனியார் நிலத்தில் நின்றுக்கொண்டிருந்த காரில் இருந்த ஆண், பெண்ணை மர்ம நபர்கள் வெட்டியிருக்கிறார்கள். உயிரிழந்த ஆண் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ரஞ்சித் என்றும், பெண் 30 வயது மாலினி என்றும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில் திருமணத்தை மீறிய உறவு காரணமாக, சிவரஞ்சனியின் கணவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Tirupattur double murder

இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் என தனித்தனி குடும்பங்கள் இருக்கின்றன. இப்படி இருக்கையில், நேற்று மாலை திருவண்ணாமலையிலிருந்து காரில் வந்த ரஞ்சித், மாலினியை அழைத்துக்கொண்டு தோரணம்பதியில் உள்ள தனியார் காலி மனைக்கு சென்றிருக்கிறார். மாலினியின் கணவர் பின் தொடர்ந்து வந்து.. அவர்களை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்திருக்கின்றனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது. இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்." என வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோல திமுக எம்பி கனிமொழி, "திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது?

இந்தப் படுகொலைகளைத்தான் தவெக அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+