17 படுக்கைகளுடன் தொடங்கிய கங்கா மருத்துவமனை.. வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனர் கனகவள்ளி மறைவு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை கங்கா மருத்துவமனையின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான கனகவள்ளி சண்முகநாதன் தனது 89வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு மருத்துவத்துறையினர், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோவையில் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று கங்கா மருத்துவமனை. அதன் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான கனகவள்ளி சண்முகநாதன் தனது 89வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் நவம்பர் 22ம் தேதி காலை 10 மணிக்கு கோவை ஜிகேடி Crematoriumல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Ganga Hospital Kanakavalli Shanmuganathan Coimabtore

கனகவள்ளி சண்முகநாதன் கடந்த 1937ம் ஆண்டு சேலம் அருகேயுள்ள மகுடஞ்சாவடி கிராமத்தில் பிறந்தார். மருத்துவர் ஜே.ஜி. சண்முகநாதனை திருமணம் செய்துகொண்ட அவர், கணவருடன் இணைந்து கோவையில் கங்கா மருத்துவமனையை தொடங்குவதில் முக்கிய பங்காற்றினார். ஆரம்பித்ததோடு வேலை முடிந்தது என நின்றுவிடாமல் இன்று கோவையின் மிக முக்கிய மருத்துவமனையாக கங்கா மருத்துவமனையை மாற்றுவதிலும் அவருக்கு மிக பெரிய பங்கு இருக்கிறது.

கடந்த 1978ம் ஆண்டு கோவை ராமநகரில் வெறும் 17 படுக்கைகள் மற்றும் 2 ஆபரேஷன் தியேட்டர்கள் உடன் கங்கா மருத்துவமனை தொடங்கப்பட்டது. டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதனுடன் இணைந்து கனகவள்ளி சண்முகநாதனும் மருத்துவமனையின் வளர்ச்சிக்காக பணியாற்றினார். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, படிப்படியாக விரிவடைந்து சிறப்பு மருத்துவ மையமாக வளர்ந்தது.

கடந்த 2007ம் ஆண்டு மேட்டுப்பாளையம் சாலையில் தற்போது அமைந்துள்ள பெரிய வளாகத்துக்கு மருத்துவமனை மாற்றப்பட்டது. தொடர்ந்து 2020ம் ஆண்டில் கூடுதல் கட்டடமும் இணைக்கப்பட்டது. இன்று எலும்பியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை என முக்கிய துறைகளை உள்ளடக்கிய முக்கியமான மருத்துவமனையாக கங்கா மருத்துவமனை உள்ளது.

வெறும் 17 படுகைகள் உடன் தொடங்கப்பட்ட கங்கா மருத்துவமனை இப்போது 650 படுக்கைகள் மற்றும் 38 ஆபரேஷன் தியேட்டர்கள் உடன் தெற்காசியாவின் முக்கிய சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் கனகவள்ளி சண்முகநாதனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

கங்கா மருத்துவமனையின் மற்றொரு நிறுவனரான டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி தனது 99-வது வயதில் காலமானார். தற்போது கனகவள்ளி சண்முகநாதனும் மறைந்துள்ள நிலையில், கங்கா மருத்துவமனையை உருவாக்கி வளர்த்த நிறுவனர்களான இருவரும் மறைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+