பயிற்சியாளர் vs மென்டார்.. தோனியின் வேலை என்ன? ருதுராஜ் பற்றிய எண்ணம்.. ஓபனாக சொன்ன ஜாகீர் கான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கான் மனம் திறந்துள்ளார். தோனியின் பணி என்ன என்பது தொடர்பாக பேசியுள்ள ஜாகீர் கான், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சி மற்றும் டிரேட் பேச்சுவார்த்தைகள் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணி ரிடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மறுபக்கம் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலத்திற்கும் சிஎஸ்கே அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் பயிற்சியாளர் ஜாகீர் கானின் நேர்காணலை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Zaheer Khan

ஜாகீர் கான் நேர்காணல்

அதில் ஜாகீர் கான் பேசுகையில், தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை மெகா ஏலம் என்றால், அதுதொடர்பாக சிந்தித்திருப்பேன். இருந்தாலும் என்னுடைய சுமையை தோனி பகிர்ந்து கொள்ள வந்துவிட்டார். தோனி கேப்டனாக இருக்கும் போது, ஒவ்வொரு வீரர் மீது நம்பிக்கை வைப்பார். சுதந்திரம் கொடுத்து தேவையானவற்றை செய்ய வைப்பார். அதுதான் தோனியின் ஸ்டைல்.

சிஎஸ்கே அணியின் ஸ்டைலும் அதுதான். தற்போது கிரிக்கெட் என்பது களத்திற்கு உள் மட்டுமல்ல, வெளியிலும் விளையாடப்படுகிறது. டெக்னிக்கலாக கிரிக்கெட் வேறு ஒரு பரிமாணத்தை எட்டிவிட்டது. ஒவ்வொரு வீரருக்கும் நம்மால் திட்டமிட முடியும். ஆனால் சூழலுக்கு திட்டமிட முடியாது. அங்குதான் தனி நபரின் திறமை அவசியம். அதனால் கிரிக்கெட்டில் சூழலை பொறுத்து திட்டங்களும் மாற்றப்பட வேண்டும்.

பயிற்சியாளர் vs ஆலோசகர்

சிஎஸ்கே அணி மீண்டும் ஆக்ரோஷமான, சுவாரஸ்யமான கிரிக்கெட்டை விளையாடும் பாதைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. பயிற்சியாளர், மென்டார் என்பதெல்லாம் வெறும் பெயர்கள் தான். ஒரு அணியின் வெற்றிக்கும், முக்கியத்துவத்திற்கும் பங்களிப்பு செய்ய வேண்டும். அதேபோல் நாங்கள் அனைவரும் ஒரே சிந்தனையில் செயல்பட வேண்டும். அதுதான் முக்கியம்.

ருதுராஜ் கேப்டன்சி

ருதுராஜ் கெய்க்வாய் கிரிக்கெட் தொடர்பாக அதிகமாக சிந்திக்க கூடியவர். தோனி தான் அவரை கண்டறிந்து கொண்டு வந்துள்ளார். தற்போது தான் ருதுராஜ் கெய்க்வாட்டின் சிந்தனையையும், எண்ணங்களையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அவருக்கு சில புதிய டைமன்ஷன்களை ஒரு ஆப்ஷனாக கொடுக்க முயற்சிக்கிறேன். அப்படிதான் ஒரு கேப்டன் உருவாக வேண்டும்.

நம்முடைய திட்டங்களுக்கு அவர்களை இறக்க கூடாது. அவர்கள் தான் களத்தில் விளையாடுகிறார்கள். அவர்களின் எண்ணம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும். சிஎஸ்கே அணியின் டிரேட் தொடர்பாக சில பேச்சுகள் உள்ளன. கலீல் அஹ்மத், நேதன் எல்லீஸ் சிறந்த வீரர்களாக இருந்தாலும் டிரேட் செய்துள்ளோம்.

சிஎஸ்கே டிரேட் பேச்சுகள்

டிரேட் என்பது ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை அடைய முடியும். சிஎஸ்கே அணியின் தேவை மற்றும் திட்டங்களுக்கு ஏற்ப தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நிறைய அணிகளுடன் டிரேட் பேச்சுவார்த்தைகள் நடந்தன. நமக்கு தேவையான வீரர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். இருப்பினும் பெரிதாக எதையும் இப்போது வெளியில் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+