விஎஸ் பாபு இறுதி ஊர்வலத்தில்.. டென்ஷனாகி விரலை காட்டி மிரட்டிய வைகோ.. பதற்றமான தமிழன் பார்த்திபன்!
சென்னை: மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு இறுதி சடங்கில் அமைச்சர் தமிழன் பார்த்திபன் மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபம் அடைந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. விஎஸ் பாபுவுக்கு மரியாதை செலுத்த விஜய்யுடன் வைகோ சென்ற போது, அமைச்சர் தமிழன் பார்த்திபன் கைகளை வைத்து மறித்தார். இதனால் டென்ஷனான வைகோவை, தோளில் கை வைத்து சமாதானப்படுத்த, சூழல் இன்னும் பரபரப்பாகியது.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் பங்கேற்று விஎஸ் பாபுவின் உடலை தோளில் சுமந்து இறுதி மரியாதை செலுத்தினார். விஎஸ் பாபுவின் உடல் திருவிக நகரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போதும் இறுதி ஊர்வலகத்தில் செருப்பு கூட அணியாமல் விஜய் நடந்து சென்று இறுதி மரியாதையை செலுத்தினார். முதல்வர் விஜய் மட்டுமல்லாமல் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், பிரபு, ஸ்ரீநாத், விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி, தவெக எம்எல்ஏ சரவணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவிக நகர் மயானத்திற்கு விஎஸ் பாபு உடல் கொண்டு வரப்பட்ட பின் முதல்வர் விஜய் இறுதியாக அவரின் உடலை தொட்டு வணங்கினார். அப்போது விஜய்க்கு அருகில் வைகோ நின்றிருந்தார். விஜய்யுடன் வைகோவும் அருகே சென்று உடலை தொட்டு இறுதி மரியாதை செய்ய சென்றார். அதனை கவனித்த அமைச்சர் தமிழன் பார்த்திபன் திடீரென இடையில் கைகளை நீட்டி வைகோவை தடுத்து நிறுத்தினார்.
இதனால் டென்ஷனான வைகோ, உடனடியாக அமைச்சர் தமிழன் பார்த்திபனை திரும்பி முறைத்தார். இதனால் மிரண்டு போன அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஒரு வேகத்தில் வைகோவின் தோளினை தொட்டு சமாதானப்படுத்தினார். அப்போது வைகோ உடனடியாக விரலை நீட்டி கொந்தளிவித்துவிட்டார். அப்போது அமைச்சர் மரிய வில்சன், விஜய்யின் பாதுகாவலர் மூசா உள்ளிட்டோர் தமிழன் பார்த்திபனை எச்சரித்தனர்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதனால் வைகோவுக்கு இப்படியொரு நிலையா என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தவெகவின் முக்கிய கூட்டணி கட்சியாக மதிமுகவை முன்னிறுத்தி வரும் வைகோவை, பொதுவெளியில் அமைச்சர் தமிழன் பார்த்திபன் இப்படி நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



Click it and Unblock the Notifications
