வடக்கே ஆளே இல்லாத இடத்தில் ஏர்போர்ட்.. ஆனா பரந்தூரை வேண்டாம் என சொல்லும் விஜய் அரசு! என்ன லாஜிக் இது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு 2வது விமான நிலையம் என்பது மிக அத்தியாவசியமாக தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், பரந்தூரில் விமான நிலையம் அமைவது ஏகப்பட்ட காரணங்களால் தாமதம் ஆகிக் கொண்டே போகிறது. ஆனால், வடஇந்தியாவில் திறக்கப்பட்ட புதிய ஏர்போர்ட்களில் கூட கூட்டமே இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அருகே ராணுவத்தின் நிலம் உள்ளது, அங்குள்ள மக்களை இடமாற்றம் செய்ய ஆகும் செலவுகள் என ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.

Parandur Airport

2வது சர்வதேச விமான நிலையம்

இதற்குத் தீர்வாகவே சென்னையின் 2வது சர்வதேச விமான நிலையமாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. நீண்ட போராட்டங்கள், பலகட்ட தாமதங்களுக்கு பிறகு கடந்த திமுக ஆட்சியில் பரந்தூர் இறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்தாண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் இடம் தேர்வில் இருந்து பல்வேறு பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க வட இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடப்பது தொடர்பாக வெளியான வீடியோ தமிழகத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் எடுத்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் விமான நிலையம் முழுவதும் வெறிச்சோடி கிடைப்பதும், அங்கு பயணிகள் யாரும் இல்லாததும் தெரிகிறது.

வீடியோ

அவர் மேலும், "நொய்டாவில் இருந்து நான் செல்லும் முதல் விமான பயணம் இது. ஆனால், இங்கே வேறு யாருமே இல்லை போல இருக்கிறது. விமான நிலையத்தில் வேறு எந்த பயணியையும் பார்க்க முடியவில்லை. இங்கே நான் மட்டும்தான் இருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடிோயவை பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், "இங்கே வரவிருந்த பரந்தூர் விமான நிலையம் திட்டத்தையே ரத்து செய்து விட்டோம்! வடக்கே ஆளே இல்லாத இடங்களிலும் சர்வதேச விமான நிலையங்களை கட்டி வைத்து காத்திருக்கின்றனர்!" என பதிவிட்டுள்ளார்.

காரணங்கள்

அதாவது வட இந்தியாவில் ஆளே இல்லாத இடங்களில் எல்லாம் ஏர்போர்ட் இருப்பதாகவும் ஆனால் தமிழகத்தில் தேவையான இடங்களில் ஏர்போர்ட் கட்ட கூட அரசியல் நடப்பதாக அவர் விமர்சித்துள்ளார். அதேநேரம் நொய்டா ஏர்போர்ட்டில் இந்தளவுக்கு ஆள் இல்லாமல் போக காரணம் இருக்கவே செய்கிறது. அதாவது இந்த நொய்டா விமான நிலையம் கடந்த ஜூன் 15ஆம் தேதிதான் விமான சேவையை தொடங்கியது. தற்போது இண்டிகோ, ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சுமார் 16 ரூட்டில் தினமும் 30 முதல் 35 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சர்வதேச விமான சேவையும் இன்னும் தொடங்கவில்லை.

அதாவது டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 7.8 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் நிலையில், நொய்டா விமான நிலையம் இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது. மேலும், நொய்டா விமான நிலையம் டெல்லி மற்றும் மத்திய நொய்டாவின் முக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அங்கு செல்லவும் சாலைகளையே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து இன்னும் முழுமையடைவில்லை. நொய்டா விமான நிலையம் காற்று வாங்க இவையெல்லாம் தான் காரணமாக உள்ளது.

சென்னை ஏர்போர்ட்

சென்னையை பொறுத்தவரை பரந்தூர் விமான நிலையத்தில் ஏற்கெனவே பயணிகள் நெரிசல் அதிகமாக உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்குவதிலும் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பதால், எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

விமர்சனம்

ஏற்கெனவே சென்னையில் விமான சேவைகள் மற்றும் பயணிகள் நெரிசல் தொடர்பான ஏகப்பட்ட புகார்கள் உள்ள நிலையில், புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடுவது எதிர்காலத்தில் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. வட இந்தியாவில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள இடங்களிலும் கூட எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையங்களை கட்டுகிறார்கள். ஆனால், சென்னைக்கு இ்பபோதே விமான நிலையத்தில் நிலைமை மோசமாக உள்ள நிலையில் திட்டம் கைவிடப்படுவது சர்ச்சையாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+